Saturday, 2 June 2018

ஸ்ரீரங்க கத்யம் Part V



Image result for Image of Srirangagadyam

"ஏவமவஸ்த்திதஸ்யாபி அர்த்தித்வ மாத்ரேண பரமகாருணிகோ பகவான் ஸ்வாநுபவ ப்ரீத்யா உபநீத ஐகாந்தி காத்யந்திக நித்யகைங்கர்யைக ரதிரூப நித்யதாஸ்யம் தாஸ்யதீதி விச்வாஸ பூர்வகம் பகவந்தம் நித்யகிங்கரதாம் ப்ரார்த்தயே"॥3॥

இப்படி இருந்த போதிலும், எனக்கு வணங்கி வேண்டுவது மாத்திரத்தி னா லேயே மிகுந்த கருணையையுடைய பகவான், தன்னை அநுபவிப்பதினால் ஏற்பட்ட பேரன்பினால் உண்டாக்கப் பட்டதும், ஒரே நிச்சயத்தோடு கூடிய தும், ஒழிவு இல்லாமலிருப்பதுமான எப்பொழு துமான கைங்கர்யம் என்ற ஸேவகத்தில் ஒன்றிலேயே ஆசையை ஸ்வரூபமாக வுடைய நித்யகைங்கர்யத்தைக் கொடுக்கப் போகின்றான் என்கிற பெருத்த நம்பிக்கை யை முன்னிட்டு, பகவானை, அடியேனா கிய நான், அவரிடத்தில் நித்யகைங்கர் யத்தை மாத்திரமே வேண்டிக் கொள்கி றேன். 3.

                     Image result for Image of Srirangagadyam  
தவாநுபூதி ஸம்பூத-ப்ரீதி காரித தாஸ்யதாம்।
தேஹி மே க்ருபயா நாத ந ஜாநே கதிரந்யதா॥4॥

ஹே பகவானே உம்முடைய அநுபவத் தினால் உண்டான பேரன்பினால் செய்விக் கப்பட்ட கைங்கர்யத்தைக் கருணை கொண்டு எனக்குக் கொடுங்கள்.   உம்மைத் தவிர அடியேனுக்கு வேறு கதி எதுவும் தெரியாது. 4.

ஸர்வாவஸ்தோசிதாசிதாசேஷ சேஷதைகரதிஸ்தவ।  பவேயம் புண்டரீகாக்ஷ த்வமேவைவம் குருஷ்வ மாம்॥5॥


அன்றலர்ந்த தாமரை மலரொத்த திருக் கண்களையுடைய பகவானே! உமக்கு  எல்லா நிலைகளுக்குத் தகுந்ததாகிய எல்லா கைங்கர்யங்களிலேயும் ஒன்றி லேயே ஆசையுடையவனாக அடியேன் ஆகக் கடவேன்.  ஆகையால் அடியே னான என்னை இப்படிப் பட்டவனாக நீரே செய்துவிடும்.5.


ஏவம் பூத தத்த்வ யாதாத்ம்ய அவபோத ததிச்சா ரஹிதஸ்யாபி ஏததுச்சாரண மாத்ராவலம்பநேன உச்யமானார்த்த பரமார்த்த நிஷ்ட்டம் மே மநঃ த்வமேவ அத்யைவ காரய॥6॥

இப்படிப்பட்ட தத்த்வங்களின் உண்மை யைப் பற்றித் தெரிந்துகொள்வது, அவற் றில் ஆசையில்லாமலிருந்த போதும், இதைச் சொல்வதை மட்டும் ஒன்றையே ஆதாரமாக வைத்துக்கொள்வதினால், இதில் சொல்லப்படுகின்ற அர்த்தத்தில், உண்மையான நிலையையுடையதாக அடியேனது மனதை இப்பொழுதே நீரே செய்விக்கவும்.6.

அபார கருணாம்புதே அநாலோசித விசேஷாசேஷலோக சரண்ய, ப்ரண தார்த்திஹர, ஆச்ரிதவாத்ஸல்யைக மஹோததே, அநவரத விதித நிகில பூத ஜாதயாதாத்ம்ய, ஸத்யகாம, ஸத்யஸங்கல்ப, ஆபத்ஸக, காகுத்ஸ்த்த, ஸ்ரீமந், நாராயண, புருஷோத்தம, ஸ்ரீரங்கநாத, மம நாத, நமோ(அ)ஸ்து தே॥7॥


கரையில்லாத கருணைக்கடலே, எண்ணத் திற்கும் அப்பாற்பட்டுப் பல வேற்றுமை களையும், சிறப்புகளையும், மேன்மைக ளையும் கொண்டிருத்தலால் அனைத்து யிர்களாலும் உலகங்களாலும் அடைக் கலமாக அணுகப்பெற்றவனே! அண்டி வணங்கியவர்களின் இன்னலைப் போக்கடிப்பவனே! தாய்ப்பசுவானது தனது கன்றின் மீது எவ்வளவு பரிவு காட்டுமோ அவ்வளவு அதைப்போலத் தன்னை அடைக்கலம் அடைந்தவர்களுக்குப் பரிவு என்ற ஒன்றை மட்டும் கொண்டே கடலாக இருப்பவனே! இடைவிடாத அறியப் பட்ட எல்லா ப்ராணிகளின் கூட்டங் களுடைய உண்மையான நிலையைக் கொண்டவனே! உண்மையை விரும்பு பவனே! வீணாகாத உண்மையின் உறு தியிலிருப்பவனே! இடுக்கண் களை கின்ற நண்பனைப் போன்றவனே! கொல்லப்படக்கூடிய வனைக் கூட கருணையால் மன்னித் தருளும் ககுத்ஸ்த்தனது வம்சத்தில் தோன்றி ஸ்ரீராமனாக அவதரித்தவனே! பெரிய பிராட்டியான ஸ்ரீலக்ஷ்மீதேவி யோடு கூடியவனே! எங்கும் வ்யாபித் திருக்கும் தன்மை கொணட நாராயணனே! கரந்தெங்கும் பரந்துள்ளவனே! தன்னை அண்டியவர்களுக்கு அவர்களது விருப் பங்களையும் கொடுத்து, அதனால் த்ருப்தி யுறாது தன்னையும் கொடுத்தும் காத்தும் தன்னுடைய எளிமையை வெளியிடும் புருஷோத்தமனே!  கெட்ட இந்த்ரியங்க ளுக்கு வசப்பட்டு, பாபத்தினால் மறைக் கப்பட்ட மனிதர்களின் மனங்களைத் தூய்மையாக்கும் புண்ய பூமியான பகவான் வஸிக்கும் இடமான ஸ்ரீரங்கம் என்னும் திவ்யதேசத்தில் உறையும் ஸ்ரீரங்கநாதனே! என்னு டைய தலைவனே! உன்னை நான் அடிபணிந்து வணங்குகின்றேன்.7.


முடிவுரைঃ-
கற்றதனா லாயபய னென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழா அர் எனின்.

என்னும் வள்ளுவனது வாக்கினை மனத்திலிருத்த வேண்டும்.  இவ்வுலகில் எந்த உயிராயிருந்தாலும் கடவுளை வணங்கவேண்டும்.  அதிலும் கற்றவர்கள் மற்றையேதும் நினைக்காமல் உற்றவ னாம் உயர்ப்பரம்பொருளாம் இறைவனை எப்பொழுதும் இடைவிடாது வணங்க வேண்டும்.  இந்த ஸ்ரீரங்க கத்யம் என்ற நூலில் ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தத்தின் தத்த்வத்ரயம் என்னும் மூலமந்த்ரம், த்வயம், சரமச்லோகம் என்றவைகளின் இரண் டாவதான த்வயம் என்கிற "ஸ்ரீமந் நாராயண சரணௌ ശரணம் ப்ரபத்யே, ஸ்ரீமதே நாராயணாய நமঃ " என்பதின் உட்பொருளை விளக்குகிறது.   இங்கு ஸ்ரீரங்ககத்யத்தில் ஸ்ரீமந் மற்றும் நாராயண என்கிற இரண்டு சொற்களும் மூலமாகிய த்வயமந்த்ரத்திலிருக்கிற ஒன்றோடொன்று சேர்ந்த ஸித்தோபாயத் தையும் ஸித்தமான ப்ரயோஜநத்தையும் தெரிவிக்கின்றன.  மேலும், இந்த ஸ்ரீரங்க கத்யத்தில், ஸ்ரீரங்கநாத! என்று விளிவேற் றுமையில் உள்ள சொல்லானது, "அர்ச்சாவதாரத்தில் உள்ள தெய்வத்தை ஒருவன் பூஜிக்க வேண்டும், அதை ஸேவித் து வணங்க வேண்டும், அதைக் குறித்து யாகம் செய்யவேண் டும், அதையே எப் பொழு தும் த்யாநம் செய்து கொண்டிருக் கவேண்டும், அதனால் பாபங்களை ஒழித் தவனாக பரப்ரஹ்மவடிவமான அந்த விக்ரஹத்தை முன்னிட்டே இறுதியில் அவனிடம் (பகவானான பரமாத்மாவிடம்) நித்ய ஸூரியாய் சென்றடைகிறான்" என்ற சௌநக மஹரிஷியின் கூற்றைத் தெரியப் படுத்துகிறது. ஆதலின், இதைப் படித்துப் பாராயணம் செய்து பகவானை மகிழ் வித்தால்  நம் பாவங்களெல்லாம் தீயினில் தூசாகும் மற்றும் எங்கும் திருவருள் பெற் றும் இன்புறுவோம் என்பது திண்ணம். 

Image result for Image of Srirangagadyam

Saturday, 10 March 2018

ஸ்ரீரங்க கத்யம் Part IV





     தனக்கே உரித்தான எப்பொழுதும் நியமிக்கத் தகுந்தவனாயிருக்கை,   எப்பொழுதும் தாஸனா யிருக்கை இவைகளையே ஸாரமாகவுடைய ஜீவாத்மாக்களின் ஸ்வபாவங்களினுடைய அநுஸந் தாநத்தை முன்னிட்டுக் கொண்டு உண்டாகின்ற 
பகவானுடைய எல்லையில்லாத மேன்மையையு
டைய தலைவனாகயிருத்தல் முதலிய எல்லா நற்பண்பு
களின் கூட்டங்களுடைய அநுபவத்தினால் உண்டாக் கப்பட்ட எல்லையில்லாத மேன்மையையுடைய பேரன்பினால்  செய்விக்கப்பட்ட எல்லா நிலைக ளுக்கும் தகுந்த எல்லாவிதமான கைங்கர்யங்கள் ஒன்றிலேயே ஆசையாகிற ஸ்வரூபமாகவுடையதும் எப்பொழுதுமான கைங்கர்யத்தை அடைவதற்கு உபாயமாகின்ற பக்தி, மற்றும் அந்த பக்திக்கு உபாயமான நல்லதான ஜ்ஞாநயோகம் (அறிவதை நன்றாக அறிதல்), அந்த ஜ்ஞானயோகத்துக்கு உபாயமான கர்யோகம் (செய்வனவற்றைத் திருந்தச்செய்தல் மற்றும் செய்யாதன செய்யேல்), அந்த கர்மயோகத்துக்கு ஏற்பதான நல்லவனாயிருக் குந்தன்மை, தெய்வம்-உண்மை-தர்மம் இவைகள் உண்டென்ற ஆஸ்திகனாயிருக்கும் தன்மை முதலிய எல்லாவிதமான, ஜீவாத்மாவுக்கு இருக்கவேண்டிய ஆத்மகுணங்கள் இல்லாதவனாயும், தாண்டமுடி யாத மற்றும் அளவில்லாததுமான அதற்குப் பகை யாகிற ஜ்ஞானம்-கர்மா அதாவது விபரீதமான அறிவு விபரீதமான செயல் இவைகளுக்குத்தகுந்த தான மூலமாக இருக்கின்ற பாபங்களின் வாஸனை அதாவது பசி, தாகம், துன்பம், அறியாமை, மூப்பு மற்றும் மரணம் என்கிற ஆறுவிதமான பாபங்க ளென்னும் அலைகளின் ஆர்ப்பரிப்பையுடைய பெரிய கடலின் நடுவிலே முழுகினவனாயும், எள் ளோடு எண்ணெய் சேர்ந்திருப்பது போலவும், மரத் தோடு நெருப்பு சேர்ந்திருப்பது போலவும் பிரிக் கமுடியாத நிலம், இயற்கை, வடிவம் என்ற மூன்று குணங்களையுடையதும், ஒவ்வொரு நொடியும் மாறுதலை இயல்பாகக்கொண்ட அசேதநம் என்று சொல்லும்படியான ப்ரக்ருதி அதாவது இயல்பாக நுழைந்து எங்கும் பரவியிருக்கின்ற நிலையை யுடை யதும், தாண்டமுடியாததுமான பகவாநுடைய மாயையினால் மறைக்கப்பட்ட  தன்னுடைய வெளிப்பாட்டையுடையவனாகவும், முழுமுதற் கொண்டிருக்கின்ற "உடலே உயிரென்று நினைக்கும் அறியாமை" யினாலே, சேர்த்துக் குவித்த அளவில்லாத அவிழ்க்கமுடியாத செயல் அல்லது வினைகளென்கிற கயிறுகளினால் சுற்றப் பட்டவனாயும், இனி வரவிருக்கிற அளவில்லாத காலங்களில் எதிர்ப்பார்த்திருந்த போதிலும், பார்க் கப்படாத அல்லது பார்க்கமுடியாததான இவ்வுலக வாழ்க்கையென்னும் பிறவிப்பெருங்கடலைத்  தாண் டுவதற்கு உபாயத்தையுடையவனாயுமிருக்கிற அடியேனான நான், எல்லா ஜீவராசிகளுடைய கூட்டத்திற்கும் அடைக்கலம் என்று அடையவேண் டியவனாகிய ஸ்ரீமஹாலக்ஷ்மீயுடன் சேர்ந்திருப் பவனான ஸ்ரீமந் நாராயணனே! தாமரைப்பூக் களைப்போன்றதான உம்முடைய  திருவடிகளான இரண்டையும் அடைக்கலமாக அடைகின்றேன்.

Friday, 2 March 2018

ஸ்ரீரங்ககத்யம் Part III








“ஸ்வாத்ம நித்ய நியாம்ய நித்யதாஸ்யைக ரஸாத்ம ஸ்வபாவாநுபாவாநுஸந்தாந பூர்வக பகவத் அநவதிகாதிശய ஸ்வாம்யாதி அகிலகுணகணாநுபவ ஜனித அநவதிக அதிശய ப்ரீதிகாரித அേശஷ அவஸ்த்தோசித அേശஷ േശஷதைகரதிரூப நித்யகைங்கர்ய ப்ராப்த்யுபாயபூத பக்தி ததுபாய ஸம்யக்ஜ்ஞாந ததுபாய ஸமீசீன க்ரியா ததநுகுண ஸாத்விகதாஸ்திக்யாதி ஸமஸ்த ஆத்மகுணவிஹீந துருத்தராநந்த தத்விபர்யய ஜ்ஞாந க்ரியாநுகுண அநாதி பாபவாஸனா மஹார்ணவ அந்தர்நிமக்ந:; திலதைலவத் தாருவஹ்நிவத் துர்விவேശ த்ரிகுண க்ஷண க்ஷரண ஸ்வபாவ அசேதந ப்ரக்ருதி வ்யாப்திரூப துரத்யய பகவந்மாயா திரோஹித ஸ்வப்ரகாശ:; அநாத்யவித்யா ஸஞ்சித அநந்த அശக்ய விശ്ரம்ஸந கர்ம பாശ ப்ரக்ரதித:; அநாகத அநந்தகால ஸமீக்ஷயாபி அத்ருஷ்ட ஸந்தாரோபாய:; நிகில ஜந்துஜாதശரண்ய ஸ்ரீமந் நாராயண தவ சரணாரவிந்தயுகளம் ശரணமஹம் ப்ரபத்யே” 2

Saturday, 24 February 2018

ஸ்ரீ ரங்ககத்யம் Part - II



 


தனக்கு வசப்பட்ட பத்தர், முக்தர், நித்யர் மூன்று வகையான ஜீவாத்மாக்கள், இயற்கை, நேரம், தூய்மையான நன்மை என்கிற அறியுந்தன்மை யில்லாதவைகள், இவைகளின் பல பிரிவுகளையுடையவனாயும்; அறியாமை, தானே எல்லாம் என்கிற எண்ணம், விருப்பு, வெறுப்பு, பீடித்தல் என்கிற ஐந்துவிதமான இன்னல்கள், புண்யம்-பாபம் என்பவற்றைக்கொடுக்கக் கூடிய கர்மவினைகள் முதலான குற்றங்களினாலும் தொடப்படாதவனும்; தனது எண்ணத்தின்மையாலே ஏற்பட்ட எல்லையில்லாத மேன்மை, அறிவு, வலிமை, நியமிக்குந் தன்மை, மாற்றமில்லாமை, ஆற்றல், தேஜஸ் என்னும் உள்ளொளி, நல்லொழுக்கம்,பரிவு, மெனமை, நேர்மை, நட்பு, ஸரி நிகர் ஸமானமா யிருத்தல், கருணை, இனிமை, கம்பீரம், வள்ளல்தன்மை, திறமை, நிலைத்திருத்தல், துணிவு, பயமின்மையால் வீரத்துடனும் வலிமையுடனும் எதிரிகளைப் புறமுதுகிட்டோடவைக்கும் தன்மை, ஸத்யம் என்பதான உண்மையை விரும்பியேறகுந் தன்மை, உண்மையைக் குறித்தே நோக்கமாயிருக்குந் தன்மை, மற்றவர்க்கு உதவும் தன்மை, தன்னையண்டி வணங்கினவனுக்கு உண்மையாக இருத்தல் போன்ற முதலான கணக்கில்லாத நற்பண்புகளின் கூட்டங்களாகிற பெருக்குகளுக்கு பெரிய கடல் போன்றவனும்; பரம்பொருள் எனப்படுகிற பரமாத்மாவானவனும்; தனக்குவமையில்லாதவனும், நம் தலைவனுமான ஸ்ரீரங்கநாதனை; நன்கு அறியப்பட்டு எப்பொழுதும் நியமிக்கத்தகுந்தவனாயிருக்கையும், எப்பொழுதும் தாஸனாக அதாவது ஸேவகனாக இருக்கையையும், மேற்சொன்ன இந்த இரண்டு விதமான கூறுகளை ஸாராம்சமாகவுடைய, ஜீவாத்மாவின் ஸ்வபாவத்தை யுடையவனுமாகிய அடியேனான நான்,மேற்சொன்ன அந்த பகவானை ஒருவனைப்பற்றிய அனுபவத்தை யுடையவனாயும்,அந்த ஒரு பகவானையே ப்ரியனா கவுடையவனாகவும், எல்லாவித குணக்கூட்டங்களா லும் நிறைந்த அந்த பகவானை ஒருவனையே, மிகவும் ஆழங்கால் பட்ட அநுபவத்தினால், இடைவிடாமல் அநுபவித்து, அந்த அநுபவத்தினால் உண்டாக்கப் பட்டதும் எல்லையில்லாத மேன்மையையுடையதும், பேரன்பினால் செய்விக்கப்பட்ட, எல்லாவிதமான நிலைகளுக்கும் தகுந்ததாயிருக்கின்ற எல்லாவிதமான கைங்கர்யங்களில் ஒன்றிலேயே ஆசைக்கொண்டிருத் தல் என்னும் ஸ்வரூபமாகவுடைய எப்பொழுதும் ஸேவகனாகக் கடவேன். 1 

Saturday, 17 February 2018

ஸ்ரீ மத் ராமானுஜர் அருளிச் செய்த ஸ்ரீரங்ககத்யம் Part - I

Image result for Image of Srirangagadyam
Image result for Image of Srirangagadyam  Image result for Image of Srirangagadyam


ஸ்ரீ:

முன்னுரை:-

     இவ்வுலகவாழ்க்கையில் உழன்று திரிகின்ற மானிடர்களான 
நம்மை மிகக் கருணையுள்ளம் கொண்டவனான எல்லாம் வல்லப் பரம்பொருளாகத் திகழ்கின்ற ஸ்ரீமந்நாராயணன், “பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து”என்ற கருத்திணங்கவும்
“அடையார் கமலத்தலர்மகள் கேள்வன் கையாழி யென்னும்
படையோடு நாந்தகமும் படர் தண்டு மொண் சார்ங்க வில்லும்
புடையார் புரிசங்கமு மிந்தப் பூதலங் காப்பதற் கென்
றிடையே ராமாநுச முனி யாயின விந்நிலத்தே.”
என்னும்படியாகவும் பூதபுரீ என்பதான ஸ்ரீபெரும்பூதூரில் கேശவஸோமயாஜீ-காந்திமதீ என்கிற தம்பதிகளுக்குப் புதல்வனாக பகவான் ஸ்ரீமந் நாராயணனே ஸ்ரீமத்ராமாநுஜர் என்ற பெயரில் அவதரித்தது இந்நானிலமறிந்ததே.  இவர் தனது சீடர்களையும் மற்றுமுள்ள மக்களையும் உஜ்ஜீவிப்பதற்காக ஒன்பது பனுவல்களை யாத்தருளினார்.  அவற்றுள் ஸ்ரீரங்க கத்யம் என்பது ப்ரபத்தி என்பதான ശரணாகதி  / அடைக்கலத்துக்கு 1. ஆநுகூல்ய
ஸங்கல்பம் = பகவானை அடைய உதவுபவைகளை ஏற்பது, 
2. ப்ராதிகூல்ய வர்ஜனம் =பகவானை அடையத் தடைகளை நீக்குவது, 3. ஆகிஞ்சன்யம் = கைம்முதலில்லாமை, 4.மஹாவிശ്வாஸம்= காப்பாற்றுவான் என்ற பெருத்த நம்பிக்கை, மற்றும் 5. கோப்த்ருத்வ வரணம் = காப்பாற்றும்படி வேண்டித் தஞ்சம்/அடைக்கலம்/ശரணாகதி அடைதல் இவைகள் போதும் என்ற அளவில் ஸ்ரீமத்ராமாநுஜர், கத்யம் அதாவது உரைநடை வடிவிலே இந்த ஸ்ரீரங்ககத்யத்தை அருளியுள்ளார்.  சீடர்களின் நன்மையின் பாலுள்ள ஊற்றத்தையுடைய ஸ்ரீமத்ராமாநுஜர் அளவில் சிறிய
தாயினும் கருத்தாழங்கொண்ட இந்த ஸ்ரீரங்ககத்யத்தைச்  சற்றே தமிழ்மொழியில் கற்று இன்புறுவோம்.


                               Image result for Image of Sriranganathar

விளக்கவுரை:-
     “ஸ்வாதீந-த்ரிவித-சேதநாசேதந-ஸ்வரூப-ஸ்த்திதி-
ப்ரவ்ருத்தி பேதம்; க்லேശ-கர்மாத்யേശஷ-தோஷ
அஸம்ஸ்ப்ருஷ்டம்; ஸ்வா பாவிக-அநவதிக-அதிശய-
ஜ்ஞாந-பல-ஐ˜;வர்ய-ശக்தி-தேஜ: ஸௌ˜Pல்ய-வாத்ஸல்ய-
மார்தவ-ஆர்ஜவ-ஸௌஹார்த-ஸாம்ய- காருண்ய-
மாதுர்ய-காம்பீர்ய-ஔதார்ய-சாதுர்ய-ஸ்த்தைர்ய-தைர்ய 
சௌர்ய-பராக்ரம-ஸத்யகாம-ஸத்யஸங்கல்ப-க்ருதித்வ- 
க்ருதஜ்ஞதாதி-அஸங்கயேய-கல்யாண-குண-கணௌக- மஹார்ணவம், பரப்ரஹ்மபூதம்; புருஷோத்தமம், ஸ்ரீரங்க
சாயினம், அஸ்மத்- ஸ்வாமிநம், ப்ரபுத்த-நித்ய-
நியாம்ய-நித்யதாஸ்யைக-ரஸாத்ம-ஸ்வபாவோ(அ)ஹம், ததேகாநுபவ:, ததேகப்ரிய:, பரிபூர்ணம், பகவந்தம், 
விசததமாநுபவேன நிரந்தரமநுபூய, ததநுபவ-ஜநித-
அநவதிக-அதிசய ப்ரீதிகாரித-அசேஷ-அவஸ்த்தோசித- 
அசேஷ-சேஷதைக-ரதிரூப-நித்யகிங்கரோ பவாநி” ॥1॥

Friday, 9 February 2018

श्रीवेलामूरु श्रीसुन्दर वरद राज मङ्गल स्तोत्रम् Part IV



 


  .  ïIvelamUé ïI–suNdr-vrd-raj-m¼l-StaeÇm!  .
m¼l< ïIsmetay mayE naray[ay c   ,
suNdrvrdayaStu suàsNnay m¼lm!  . 1 .
rMyvrdrajay rmaiàytmay c        ,
r¼ramanujacayER> riÃtayaStu m¼lm!  . 2 .
velamUéinvasay vedvedaNtri¼[e        ,
vedaNt_aa:ykare[ veidtayaStu m¼lm! . 3 .
vrahayR-vracayR-sdacayR-sutaicRt   ,
sdaraeGya_ay»airn! vrdaÇe c m¼lm!  . 4 .
ïIvEku{Qivr´ay ïIvE:[vihtEi;[e   ,
velamUéinvasay rMyrajay m¼lm! . 5 .
tu{fIrm{fle ¢ame velamUirit mi{fte         ,
pi{ftE> ka{f(ma[ay o{foa*ay m¼lm! . 6 .
kirzElivr´ay klaE kaé{yisNxve   ,
suNdrvrdayaStu sda seVyay m¼lm!  . 7 .
;i:qàbNxinmaRÇe svRzaSÇawRveidne        ,
dzaepion;da< Éav-Éa:ykaray m¼lm!  . 8 .
kasarsUrye inTy<    m¼l< _aUtyaeigne    ,
mhdaþyay vyaRy   _ai´saray m¼lm! . 9 .
m¼l< zQkaepay kvye mxuray c      ,
ïI_aUpkuljatay zeorayaStu m¼lm! . 10 .
_a”ayR iv:[uicÄay gaedayE inTym¼lm!  ,
_a´a'!iºre[ve inTy< m¼l< pa[sUrye      . 11 .
kilXv<say naway munye yamunay c    ,
ïImte yitrajay kUrnaway m¼lm!   . 12 .
prazray _a”ay ïIsudzRnsUrye ,
vedaNtdeizkayaStu inTyïIinRTym¼lm! . 13 .
m¼l< ïImte r¼-ramavrjyaeigne  , 
m¼l< ïImte r¼-ramavrjyaeigne . 14 .
saEMynamkivna k&t< sugmgItmev mxuraiNvt<
suNdrez k&pyaiTvd< _avtu caÇ saEOyzu_ajIivtm! ,
#iNdrarm[ciNdrannsucNdnaicRtzu_aa'!ºye
#NÔzM_auivixs<Stutay rm[Irmay zu_am¼lm!    . 15 .
 .  ïIvelamUé ïI–suNdr-vrd-raj-m¼l-StaeÇ< sMpU[Rm!  .

VĀMANA BHAṬṬA BĀṆA: LIFE AND SANSKRIT WORKS

  Vāmana Bha ṭṭ a Bā ṇ a ( वामनभट्टबाण) was a Sanskrit poet, dramatist, and prose writer associated with the later classical period of Sans...