Tuesday, 14 April 2020

श्रीमद्विष्णुचित्तसूर्यनुगृहीतं श्रीकृष्णाभिषेचनम् சிற்றிலக்கியங்களில் பெரியாழ்வார் அருளிய பிள்ளைத்தமிழில் நீராட்டம்


ஸ்ரீ:
ஸ்ரீமதே வராஹ மஹாதேஶிகாய நம:


Yashoda maiya taking bath to baby krishna | Mughal paintings ...


प्रस्तावनाः-
     अमृतादपि मधुरतरा द्रमिडभाषा। समुचितलक्ष्यलक्षणात्मकैः साहित्यैः काव्यादिभिः भरितैषा भाषान्तरसाहाय्यं विना पृथक्त्वेन तथा वैशिष्ट्येण च युक्ता, त्रिकालेष्वपि लोकव्यवहारैः नश्वरत्वं, अदृश्यत्वं, शिथिलत्वं, जरत्वं, मरणत्वं चालभमाना नवनवोन्मेषाभिः संभरितप्रतिभाभिः स्फूर्ति- भिश्च लसत्येषा अस्माकं मातृभाषा द्रमिडभाषा। द्रमिडजनानामस्माकं बाह्यान्तरजीवनाधारान् प्रतिपादयन्ति द्रमिडकाव्यानि। तेषु खण्डकाव्यानां प्रबन्धानां वैशिष्ट्यं तावत् वाचामगोचरं भवति॥

ப்ரஸ்தாவநா :-
     அம்ருதாத3பி மது4ரதரா த்3ரமிட3பா4ஷா.  ஸமுசித லக்ஷ்ய-லக்ஷணாத்மகை: ஸாஹித்யை: காவ்யாதி3பி4: ப4ரிதைஷா பா4ஷாந்தர ஸாஹாய்யம் விநா ப்ருத2க்த்வேன ததா2 வைஶிஷ்ட்2யேண ச யுக்தா, த்ரிகாலேஷ்வபி லோக வ்யவஹாரை: நஶ்வரத்வம், அத்3ருஶ்யத்வம், ஶிதி2லத்வம், ஜரத்வம், மரணத்வம் சாலப4மானா நவநவோன்மேஷாபி4: ஸம்ப4ரிதப்ரதிபா4பி:4 ஸ்ப்பூர்திபி4ஶ்ச லஸத்யேஷா அஸ் மாகம் மாத்ருபா4ஷா த்3ரமிட3பா4ஷாI  த்3ரமிட3 ஜநாநாம் அஸ்மாகம் பா3ஹ்யாந்தர-ஜீவநாதா4ரான் ப்ரதிபாதயந்தி த்3ரமிட3காவ்யானிI  தேஷு க2ண்ட3காவ்யானாம் ப்ரப3ந்தா4நாம் வைஶிஷ்ட்2யம் தாவத் வாசாமகோ3சரம் ப4வதி

முன்னுரை:-

     அமிழ்தினும் இனியது தமிழ்.  இலக்கியவளமும் இலக்கண நல மும் கொண்டு, வேற்று மொழியின் துணைவேண்டாது, தனித்து இயங்கி, அக்காலம்-இக்காலம் மற்றும் எக்காலத்திலும் உலகவழக் கிலிருந்து அழியாது, ஒழியாது, சிதையாது, மூவாது, சாவாது, இளமை குன்றாது, புதுப் பொலிவுடன் திகழ்ந்து, விளங்துவது நம் தாய்மொழியாம் தண்டமிழ். தமிழ் மக்களின் அகவாழ்வு மற்றும் புறவாழ்வுகளை ஒருங்கே காட்டுவன தமிழிலக்கியங்கள். அவை களில் சிற்றிலக்கியங்களின் பங்கு அளப்பறிய சிறப்புடையன.
   
     प्रबन्धाः इति समाख्यातानां द्रमिडखण्डकाव्यानां भेदेभ्यः लक्षण- सूचकेषु पन्निरुपाट्टियल् – नवनीतप्पाट्टियल् इत्यादिषु ग्रन्थेषु प्रबन्धानां संख्या षण्णवतिः एव इति अनिर्धारणत्वात् प्रबन्धाः कालक्रमेण बहुधा विलसन्ति॥

     ப்ரப3ந்தா4: இதி ஸமாக்2யாதாநாம் த்3ரமிட32ண்ட3 காவ்யானாம் பே4தே3ப்4ய: லக்ஷணஸூசகேஷு பன்னிருபாட்டியல் – நவநீதப் பாட்டியல் இத்யாதி3ஷு க்3ரந்தே2ஷு ப்ரப3ந்தா4நாம் ஸங்க்2யா ஷண்ணவதி: ஏவ இதி அநிர்தா4ரணத்வாத் ப்ரப3ந்தா4: காலக்ரமேண ப3ஹுதா4 விலஸந்தி

     பிரபந்தம் என வழங்கும் சிற்றிலக்கியங்களுக்கு இலக்கணங் கூறும் நூல்கள் பன்னிருபாட்டியல், நவநீதப்பாட்டியல் போன்று பல இவைகளின் எண்ணிக்கை தொண்ணூற்றாறு வகைகள் மட்டுமே என்று வரையறை கூறாததால் சிற்றிலக்கியங்கள் பல விரிந்து பரந்து கிடைக்கப் பெறுகின்றன.

    तोल्काप्पियसमयेषु प्रबन्धानामुल्लेखाः न लभन्तेऽपि तोल्काप्पियग्रन्थे निर्दिष्टं "वनप्पु एट्टनुळ् विरुन्दु (आतिथ्यं)" इति पदमाधारीकृत्य, बहुभिः कविभिः, अन्तादि, कलम्बकम्,उला, दूतु, पिळ्ळैत्तमिழ் इत्यादयः प्रबन्धस्था विषयाः लक्षणात्मकत्वेन स्वीकृतत्वात्, अगण्याः प्रबन्धाः समजायन्त॥

     தொல்காப்பியஸமயேஷு ப்ரப3ந்தா4நாமுல்லேகா2: ந லப4ந்தே(அ)பி  தொல்காப்பியக்3ரந்தே2 நிர்தி3ஷ்டம் "வனப்பு எட்டனுள் விருந்து" இதி பத3மாதா4ரீக்ருத்ய ப3ஹுபி4: கவிபி4: அந்தாதி3, கலம்ப3கம், உலா, தூ3து, பிள்ளைத்தமிழ் இத்யாத3ய: ப்ரப3ந்த4ஸ்தா2: விஷயா: லக்ஷணாத்மகத்வேன ஸ்வீக்ருதத்வாத், அக3ண்யா: ப்ரப3ந்தா4: ஸமஜாயந்த

     தொல்காப்பியர் காலத்தில் இச்சிற்றிலக்கியங்கள் காணப்பட வில்லையாயினும்,  தொல்காப்பியத்தில் கூறப்பட்ட "வனப்பு எட் டனுள் "விருந்து"என்ற" ஒன்றுமென்பதால் புலவர்களால் தாம் தாம் வேண்டியவாறு தனித்தும், பல செய்யுள்கள் தொடர்ந்தும் வர,  பொதுவிதி யொன்றைக் கையாண்டு அந்தாதி, கலம்பகம், உலா, தூது, பிள்ளைத்தமிழ் முதலானவை இலக்கணமாக எண்ணப்பட் டதால், எண்ணிறந்த  பல சிற்றிலக்கியங்கள் இயற்றப்பெற்றன.

     महाकवयः मनुष्यजीवनसंबद्धविषयान् दृष्ट्वा, विचिन्त्य, श्रुत्वा, अनुभूय, मनसि निधाय, विविधकल्पनाशक्तिभिः; उपमा-रूपक-उत्प्रेक्षा- दिभिरलङ्कारैश्च श्रोतृ-पठितॄणां मानसमपहृत्य प्रबन्धात्मकरूपेण स्वस्व ग्रन्थेषु प्रतिपादयन्ति स्म॥

     மஹாகவய: மநுஷ்யஜீவநஸம்ப3ந்த4விஷயான் த்3ருஷ்ட்வா,விசிந்த்ய, ஶ்ருத்வா, அநுபூ4ய, மநஸி நிதா4ய, விவித4கல்பநாஶக்திபி4:; உபமா-ரூபக-உத்ப்ரேக்ஷாதி3பி4 ரலங்காரைஶ்ச ஶ்ரோத்ரு-படி2த்ரூணாம் மாநஸமபஹ்ருத்ய ப்ரப3ந்தா4த்மகரூபேண ஸ்வஸ்வக்3ரந்தே2ஷு ப்ரதிபாத3 யந்தி ஸ்ம 

     புலவர் பெருமக்கள் தாங்கள், மனித வாழ்வுடன் தொடர்புடைய பல பொருண்மைகளைக் கண்டு, நினைத்து, கேட்டு, உணர்ந்து, அநுபவித்து பலதிறப்பட்ட கற்பனைத்திறங்களுடன்; உவமை, உரு வகம் போன்ற அணிநலங்களைக் கொண்டு கற்பவர் உள்ளத் தைக் கவர்ந்து; சிற்றிலக்கியங்களாகப் படைத்து வெளியிட்டுள்ளனர்.

     तादृशाः महाकवयः महाकाव्य-खण्डकाव्यानामपेक्षया नूत्नान् नानाविध विषयान्, विविधदिव्यदेशचरितानि, तदानीन्तन सार्वभौम-मन्त्रि-सेनाधि पति-वदान्यानां च दान-धर्म-वीर-सेवा-औदार्य-सौशील्य-सौलभ्यादि गुणान् तथा तत्क्रियाकलापान् च स्वस्वप्रबन्धेषु विवर्ण्य विशदीकुर्वन्ति स्म॥

     தாத்3ருஶா: மஹாகவய: மஹாகாவ்ய-க2ண்ட3காவ்யானாமபேக்ஷயா நூத்னான் நாநாவித4விஷயான், விவித4 தி3வ்ய தே3ஶசரிதானி, ததா3னீந்தன ஸார்வபௌ4ம-மந்த்ரி-ஸேநாதி4பதி-வதா3ந்யானாம் ச தா3ந-த4ர்ம-வீர-ஸேவா-ஔதா3ர்ய-ஸௌஶீல்ய-ஸௌலப்4யாதி கு3ணான் ததா2 தத்க்ரியாகலாபான் ச ஸ்வஸ்வப்ரப3ந்தே4ஷு விவர்ண்ய விஶதீ3குர்வந்தி ஸ்ம

 பெருங்காப்பியங்களிலும் சிறுங்காப்பியங்களிலும் காணப் பெறாத பல தலங்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளையும், அந்தந்த


காலத்திலிருந்த அரசர், அமைச்சர், படைத்தலைவர், வள்ளல்கள் ஆகியோருடைய அறம், வீரம், திருப்பணிகள் முதலான அரும் பெருஞ்செயல்களனைத்தையும் இச்சிற்றிலக்கியங்கள் உணர்த்து கின்றன. 

     द्रमिडसाहित्यान्तर्गत-प्रबन्धेषु अन्यतमः एकः ग्रन्थः पिळ्ळैत्तमिழ் इति।  श्रीवैष्णवमताभियुक्तेषु आழ்वार्गळ् इति दिव्यसूरिषु अग्रेसरः, श्रीमतो भगवतो रङ्गनाथस्य श्वशुरः, पेरियाழ்वार् नामा श्रीमद्विष्णु चित्तार्यवर्यः द्राविडवेदसागराख्य-नालायिर-दिव्यप्रबन्धेषु मुदलायिरमिति
प्रथमसहस्रे, पेरियाழ்वार् तिरुमोழி इति स्वनामाङ्कित- प्रबन्धं पिळ्ळै त्तमिழ்रूपेण अनुजग्राह। पिळ्ळैत्तमिழ்रूपग्रन्थानां पथप्रदर्शनं पेरियाழ் वार् नाम्ना श्रीमद्विष्णुचित्तार्यवर्येणैव कृतमित्यत्र न काऽप्यति- शयोक्तिः। स्वकीये पेरियाழ்वार् तिरुमोழி इति प्रबन्धे, भगवन्तं कृष्णमुद्दिश्य, तन्मात्रा यशोदया कृताः पिरप्पु (जन्म), तालाट्टल् (लालनम्), पालूटटल् (स्तन्यपान प्रदानम्), सेङ्कीरैप्परुवम् (सस्यवत्कम्पनम्), चप्पाणिप्परुवम् (करताडनम्), निलवै अழைत्तुच्चोरूट्टल् (चन्द्रमाहूय अन्नप्रदानम्), काक्कैयै अழைत्तुच्चोरूट्टल् (काकमाहूय अन्नप्रदानम्), कादुपेरुक्कल् (कर्णवेधनम्), नीराट्टम् (स्नपनम्), पूच्चूडल् (पुष्पालङ्करणम्), काप्पिडल् (रक्षाबन्धनम्) इत्यादि क्रियाकलापात्मकाः गाथाः, पठितृ-श्रोतॄणां मनस्सु स्वस्वकिशोरा वस्थायाः स्मृतिपदप्रदा इव महान्तमेकं रसानुभवमुत्पादयन्ति॥

     த்3ரமிட3ஸாஹித்யாந்தர்கத-ப்ரப3ந்தே4ஷு அந்யதம: ஏக: க்3ரந்த2: பிள்ளைத்தமிழ் இதிI ஸ்ரீவைஷ்ணவமதாபி4-யுக்தேஷு ஆழ்வார்கள் இதி தி3வ்யஸூரிஷு அக்3ரேஸர: ஸ்ரீமதோ ப4கவதோ ரங்க3நாத2ஸ்ய ஶ்வஶுர: பெரியாழ் வார் நாமா ஸ்ரீமத்3விஷ்ணுசித்தார்யவர்ய: த்3ராவிட3வேத3 ஸாக3ராக்2ய நாலாயிர தி3வ்யப்ரப3ந் தே4ஷு முதலாயிர மிதி ப்ரத2மஸஹஸ்ரே பெரியாழ்வார்-திருமொழி இதி ஸ்வநாமாங்கித ப்ரப3ந்த4ம் பிள்ளைத்தமிழ் ரூபேண அநுஜக்3ராஹI பிள்ளைத்தமிழ்ரூபக்3ரந்தா2னாம் பத2 ப்ரத3ர்ஶநம்  பெரியாழ்வார் நாம்நா ஸ்ரீமத்3விஷ்ணு சித்தார்யவர்யேணைவ க்ருதமித்யத்ர ந காப்யதிஶயோக்தி:I  ஸ்வகீயே பெரியாழ்வார் திருமொழி இதி ப்ரப3ந்தே4, ப43வந்தம் க்ருஷ்ணமுத்3தி3ஶ்ய, தந்மாத்ரா யஶோத3யா க்ருதா பிறப்பு (ஜன்ம), தாலாட்டல் (லாலனம்), பாலூட்டல் (ஸ்தந்யபான ப்ரதா3னம்), செங்கீரைப் பருவம் (ஸஸ்யவத் கம்பனம்), சப்பாணிப் பருவம் (கரதாட3நம்), நிலவை


அழைத்துச்சோறூட்டல் (சந்த்3ரமாஹூய அன்னப்ரதா3நம்), காக்கையை அழைத்துச்சோறூட்டல் (காகமாஹூய அன்ன ப்ரதா3நம்), காதுபெருக்கல் (கர்ணவேத4நம்), நீராட்டம் (ஸ்நபனம்), பூச்சூடல் (புஷ்பாலங்கரணம்), காப்பிடல் (ரக்ஷாப3ந்த4நம்) இத்யாதி க்ரியாகலாபாத்மகா: கா3தா2:, படி2த்ரு - ஶ்ரோத்ரூணாம் மநஸ்ஸு ஸ்வஸ்வ கிஶோரா வஸ்தா2யா: ஸ்ம்ருதிபத3ப்ரதா3 இவ மஹாந்தம் ஏகம் ரஸாநுப4வமுத்பாத3யந்தி


     தமிழிலக்கியக் கலையின் ஒரு பகுதியாகத் திகழும் சிற்றிலக் கியக் கூறுகளில் ஒன்றான பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தத்தை  ஸ்ரீவைஷ்ணவப் பெரியோர்களான ஆழ்வார்களில் பெரியவரான பெரியாழ்வார், நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில் முதலாயிரத் தொகுதி யில் பெரியாழ்வார் திருமொழி என்னும் தமது நூலாக யாத்துள் ளார்.  பிள்ளைத்தமிழ்ப்பாட்டுக்கு வித்திட்டவர் பெரியாழ்வார் எனின் அது மிகையாகா.  அவரது திருமொழியில் அவர் அருளிச் செய்த கண்ணனது பிறப்பு, தாலாட்டல், பாலூட்டல், செங்கீரைப் பருவம், சப்பாணிப் பருவம், நிலவை அழைத்துச் சோறூட்டல், காக்கையை அழைத்துச் சோறூட்டல், காதுபெருக்கல், நீராட்டம், பூச்சூடல், காப்பிடல் என போன்றவை படிப்பவர்களுக்கு ஏதோ அவர்களே தங்கள் குழந்தைப்பருவத்தினை நினைத்துப்பார்ப்பது போல ஒரு (ரஸாநுபவத்தை) பேரின்பத்தை ஏற்படுத்துகின்றன.
    
     श्रीमतो भगवतः कृष्णस्य माता श्रीमती यशोदा तावत् श्रीकृष्णस्य अवतारतत्त्वानु-वर्तित-बाल्यगुणाननुसृत्य कर्णवेधनानन्तर-मभिषेचनार्थं
सकलविधोपकरणान् सज्जीकृत्य तमभिषेक्तुमुद्युक्ता अभवत्। तदा भगवता तदनङ्गीकृते, ततस्तं निर्बन्धीकृत्य अभिषेचनस्य मुख्यत्वं विज्ञाप्य, अभिषेचनादनन्तरं तस्य शरीरालङ्करणार्थं स्व-संपादित-अङ्गरागादींश्च प्रदर्श्य, तदनुगुण-अलङ्कारैरलङ्कर्तुमना, अपि च तदभिमत-अपूप-पायस-फलादींश्च निवेदितुकामा, एवमादिभिः क्रियाकलापैः तं प्रति स्वप्रेमादींश्च प्रकटीकृत्य, केलिधूलिभिः नवनीतलेपनेन दुर्गन्धैश्च पांशुलं त्वां अहं दिदृक्षुरपि इतरैः कीदृशेयमस्य मातेति निन्द्य-माना भविष्यामि। अपि च,  ईदृशस्वरूपयुक्तं त्वां चावलोक्य भवतः प्रिया नीलादेवी परिहसेदिति तं प्रतिबोध्य, तया कृतमभि-षेचनप्रकारं भट्टनाथः श्रीमद्विष्णुचित्तसूरिः भावना-प्रकर्षेण स्वयं तन्मातृत्वेन तदवस्थापन्नो भूत्वा तत्काले तमधिकृत्य यशोदावचनं स्वयमप्यनु-भूय हृष्टमनाः भूत्वा तद्विषयं पद्यरूपेण निबबन्ध। एतत् अमृतायमानद्रमिडभाषायां विद्यमानं नीराट्टम् इति स्नपनात्मकानि  पद्यानि बाल्य-बालिश-साहस- मत्या मया संस्कृतभाषया अनूदितानि। तदत्र वयं किञ्चिदास्वादयामः ॥

     ஸ்ரீமதோ ப43வத: க்ருஷ்ணஸ்ய மாதா ஸ்ரீமதீ யஶோதா3 தாவத் ஸ்ரீக்ருஷ்ணஸ்ய அவதார தத்த்வாநு வர்தி4த-பா3ல்ய கு3ணானநுஸ்ருத்ய கர்ணவேத4னா த3நந்தரம் அபி4ஷேசநார்த2ம்  ஸகலவிதோ4பகரணான் ஸஜ்ஜீக்ருத்ய தமபி4ஷேக்துமுத்3 யுக்தா அப4வத்I ததா344வதா தத3நங்கீ3க்ருதே, ததஸ்தம் நிர்ப3ந்தீ4க்ருத்ய அபி4ஷேசனஸ்ய முக்2யத்வம் விஜ்ஞாப்ய, அபி4ஷேசனாத்3 அநந்தரம் தஸ்ய ஶரீராலங்கரணார்த2ம் ஸ்வ-ஸம்பாதி3த-அங்க3ராகா4தீ3ம்ஶ்ச ப்ரத3ர்ஶ்ய, தத3நுகு3ண-அலங் காரை: அலங்கர்துமநா, அபி ச தத3பி4மத-அபூப- பாயஸ- ப2லா தீ3ம்ஶ்ச நிவேதி3துகாமா, ஏவமாதி3பி4: க்ரியாகலாபை: தம் ப்ரதி ஸ்வப்ரேமாதீ3ம்ஶ்ச ப்ரகடீக்ருத்ய, கே2லிதூ4லிபி4: நவநீதலேபனேன துர்க3ந்தை4ஶ்ச பாம்ஶுலம் த்வாம் அஹம் தி3த்3ருக்ஷுரபி, இதரை: கீத்ருஶேயம் மாதா இதி நிந்த்3யமானா ப4விஷ்யாமிI  அபி ச, ஈத்3ருஶ-ஸ்வரூப யுக்தம் த்வாம் சாவலோக்ய ப4வத: ப்ரியா நீளாதே3வீ பரிஹஸேதி3தி தம் ப்ரதிபோ3த்4ய, தயா க்ருதமபி4ஷேசந-ப்ரகாரம் ப4ட்டநாத2: ஸ்ரீமத்3விஷ்ணுசித்தஸூரி:, பா4வநா-ப்ரகர்ஷேண ஸ்வயம் தந்மாத்ருத்வேந தத3வஸ்தா2பன்னோ பூ4த்வா, தத்காலே தமதி4க்ருத்ய யஶோதா3வசநம் ஸ்வய மப்யநுபூ4ய ஹ்ருஷ்டமநா: பூ4த்வா, தத்3விஷயம் பத்3ய ரூபேண நிப33ந்த4I ஏதத்3 அம்ருதாயமான-த்3ரமிட3பா4ஷா யாம் வித்3யமாநம் நீராட்டம் இதி ஸ்நபனாத்மகானி பத்3யானி, பா3ல்ய-பா3லிஶ-ஸாஹஸ-மத்யா மயா ஸம்ஸ்க்ருத பா4ஷயா அநூதி3தானிI  தத3த்ர வயம் கிஞ்சிதா3ஸ்வா-3யாம:


     கண்ணனின் தாயான யசோதை, தன் குழந்தையான கண்ணனு டைய அவதாரத்தின் குழந்தைப்பருவத்துக்கேற்ப, தனக்கு வந்த மெய்ப்பாட்டால் ஈர்க்கப்பட்டு, அவனது போக்குகளை அநுஸரித் துக்கொண்டு, அவனது காது பெருக்கி, திரியும் கடிப்பும் முதலான வையுமிட்டு முடித்த பிறகு, காது பெருக்கியதால் தன் குழந்தைக் கேற்பட்ட வலி நீங்க, அவனைக் குளிப்பாட்டவேண்டுமென்று முயற்சிக்கிறாள்.  பிறது, அதற்குத் தேவையான பொருட்களைத் தயார் செய்து, நீராட வா என்று அழைத்து, அவன் இசையாவிடி னும் விட்டுவிடாமல், அவனை வற்புறுத்தி, அவசியம் இன்று அவன் நீராடவேண்டிய காரணங்களை அவனுக்கறிவித்து, நீராடிய
பின்பு அவனுடைய திருமேனிக்குப் பூணவேண்டிய உறுப்புகளாகத்



திகழ்கின்ற அணி கலன்களையும் உடற்பூச்சு களையும் காட்டி, பிறகு அவனுக்குப் பிடித்த அப்பம், அக்காரவடிசல், சீடை முதலான திண்பண்டங்களையும் காண்பித்து வைக்கிறாள்.  பிறகு, அந்தக்
குழந்தையான கண்ணனின் பால் தனக்கே உண்டான அன்புப்
பெருக்கையும் சொல்லி, உனது புழுதியளைந்த பொன்மேனியை நான் காணவிரும்பினாலும், ஒருத்தி இப்படியாக தன் பிள்ளையை வளர்த்தாளே என்று கண்டவர்கள் என்னைப் பழித்தாலும் கூடப் பரவாயில்லை, ஆனால் உனது காதலியான நப்பின்னையாள் உன் னைக் கேலி செய்வாளே என எச்சரித்து, அவனை வருந்தி உடன்படுத்தி, நீராட்டம் செய்து வைத்த முறையை, பெரியாழ்வார் தானும் அநுபவிக்க விழைந்து, கருத்தாழங்கொண்டு, தாய்மை நிலையைத் தானும் ஏற்றுக்கொண்டு, அச்சமயத்தில் யசோதையான வள் தன் மகன் கண்ணனுடன் பேசின பேச்சையெல்லாம் தற்காலம் போலவே அவனைக் குறித்துப் பேசி, அவனை நீராட்டுகின்ற பக்திச்சுவையைத தானும் அனுபவித்து, அகமகிழ்ந்து, அதனூடே கற்போரையும் கேட்போரையும் ஆநந்தப்பெருக்கில் திளைக்கச் செய்கின்றார்.  இந்த நீராட்டமென்கிற தேன்மொழியான தமிழ் மொழியிலுள்ள பாசுரங்களை, சிறுமதியேனான அடியேன், வாடா மொழியான வடமொழியாம் ஸம்ஸ்க்ருதமொழியில் மொழிமாற்றம் செய்து, கவிதையாகப் புணைந்து, உங்களிடையே பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்.

Krishnabhumi » NANDOTSAVA: HOW THE HOLY BRAJ CELEBRATES AFTER ...



धृततनुनवनीत ! दिग्धसङ्केलिधूले!
न हि निशि शयनेऽस्मिन् पांशुलं त्वानुमेने।
स्नपनमतिरहं त्वां गन्धकस्तूरितैलैः
त्रिविधकरणदूर! धाव मा कारणैहि ॥ 1 ॥

द्रुततरचरवत्साः हिंसिता वामलूरैः
कथमिह नवनीतं प्राप्यते तैर्विहाय।
बहुविटपिविघातिन्! ह्यद्य ते जन्मघस्रः
सुनियतमभिषेक्तुं ब्रह्म मे धाव मैहि ॥ 2 ॥

उपचयकुचपानैर्पूतनाघातक! त्वां
ऋषभकुलवधूभिः ज्ञापिताऽहं च दृष्ट्वा।
क्वथितसलिलपूर्णं भाजनं सामलक्यं
असितमणिसुवर्ण! मज्जनार्थं त्वहैहि ॥ 3 ॥

व्यवहितनृपकंसप्रेषितं पादलत्तैः
प्रहृतशकटमारात् पूतनाप्राणहारिन्!
हरितसहितकल्हारान्वितं गन्धमाल्यं
विहितमिह मया ते सौम्य मे स्नातुमेहि ॥ 4 ॥



पृथुकमसृणपूपान् पायसं शर्करान्नं
पचनमकरवं हे भक्षणाकाङ्क्षिणस्ते।
कमलमृदुलकूचैः पैशुनाकृष्टगोपी-
विहसित इह मा भूः नाथ मे स्नाहि, नौमि ॥ 5 ॥

लुठितविहिततैलं सुप्तबालञ्चुटित्वा
निभृतविचयनेत्रं लोटयन् ते निमील्य ।
वितरणमिह कुर्वे भक्षणार्थं फलानि
ध्वनितजलधिवर्ण! स्नातुमायाहि पूर्ण!॥ 6 ॥

न हि न हि तव जनमात् ज्ञातपूर्वं मयेति
व्रजजनगणदुग्धं मन्थितं गव्यरस्यम्।
तनयदयितमाताऽऽभीरिभिर्निन्दिताऽपि
अनुचितमिह वक्ष्ये नैव ते स्नातुमेहि॥7॥

कपट-कलह-वत्सं     पुच्छ-संबद्ध-पर्णं
हननरतǃ कपित्थं कालियं चानुधावन्।
नटरमणǃ कुचेष्टान् नावजानामि तेऽहं
तव जननशुभाह्नः स्नातुमायाहि नाथ॥8॥

शिथिलपिहितगोष्ठे दिग्धधूल्यङ्गिनंस्त्वां
सततमिह  दिदृक्ष्वी  दूषिताऽहं व्रजाभिः।
त्रपितरहितǃ  कृष्णǃ  त्वां हि नीला हसेच्च
मरकतमणिवर्णǃ मञ्जनार्थं  त्वमेहि ॥ 9 ॥


सजल-जलद-नीलं  केशवं श्लाघयित्वा
पृथुल-कुच-यशोदा स्नापनीयप्रकारम्।
प्रथित-नगर-नेतुः विष्णुचित्तस्य पद्यं
भरितद्रमिडममृतं यः पठेत् तस्य शं स्यात् ॥10॥




த்4ருத-தநு-நவநீத! தி3க்த4-ஸங்கேலி-தூ4ளே!
ந ஹி நிஶி ஶயநேஸ்மிந் பாம்ஶுலம் த்வாநுமேநே
ஸ்நபன-மதிரஹம் த்வாம் க3ந்த4-கஸ்தூரி-தைலை:
த்ரிவித4-கரண-தூ3! தா4வ மா காரணைஹி 1

த்3ருத-தர-சரவத்ஸா ஹிம்ஸிதா வாமலூரை:
கத2மிஹ நவநீதம் ப்ராப்யதே தைர் விஹாய
3ஹு-விடபி-விகா4திந் ஹ்யத்3ய தே ஜந்ம-க4ஸ்ர:
ஸுநியதமபி4ஷேக்தும் ப்3ரஹ்ம மே தா4வ மைஹி2

உபசய-குச-பானைர் பூதநா-கா4தக! த்வாம்
ருஷப4-குல-வதூ4பி4: ஜ்ஞாபிதாஹம் ச த்3ருஷ்ட்வா
க்வதி2த-ஸலில-பூர்ணம் பா4ஜநம் ஸாமலக்யம்
அஸித-மணி ஸுவர்ண! மஞ்ஜநார்த2ம் த்விஹைஹி3

வ்யவஹித-ந்ருப-கம்ஸ-ப்ரேஷிதம் பாத3-லத்தை:
ப்ரஹ்ருத-ஶகடமாராத் பூதநா-ப்ராண-ஹாராரிந்!
ஹரித-ஸஹித-கல்ஹாரான்விதம் க3ந்த4-மால்யம்
விஹிதமிஹ மயா தே ஸௌம்ய மே ஸ்நாதுமேஹி4

ப்ருது2-மஸ்ருண-பூபான் பாயஸம் ஶர்கரான்னம்
பசநமகரவம் ஹே ப4க்ஷணாகாங்க்ஷிணஸ்தே
கமல-ம்ருது3ல-கூசை: பைஶுநாக்ருஷ்ட-கோ3பீ-
விஹஸித இஹ மா பூ4: நாத! மே  ஸ்நாஹி நௌமி5

லுடி2த-திலஜ-பாத்ர! ஸுப்த-பா3லான் சுடித்வா
நிப்4ருத-விசய-நேத்ரம் லோடயன் தே நிமீல்ய
விதரணமிஹ குர்வே ப4க்ஷணார்த2ம் ப2லானி
த்4வநித-ஜலதி4-வர்ண ஸ்நாதுமாயாஹி பூர்ண!6



ந ஹி ந ஹி தவ ஜாதாத் ஜ்ஞாதபூர்வம் மயேதி
வ்ரஜ-ஜந-க3ண-து3க்த4ம் மந்தி2தம் க3வ்யரஸ்யம்
3யித-தநய-மாதா கோ3பிகா-நிந்தி3தா()பி
அநுசிதமிஹ வக்ஷ்யே நைவ தே ஸ்நாதுமேஹி7

கபட-கலுஷ-வத்ஸம் பர்ண-ஸம்ப3த்34-புச்ச2ம்
ஹநந-ரத! கபித்த2ம் காலியம் சாநுதா4வன்
தத3நுரமண! சேஷ்டா நாவஜாநாமி தே () ஹம்
தவ ஜனனஶுபா4ஹ: ஸ்நாதுமாயாஹி நாத2!8

ஶிதி2ல-பிஹித-கோ3ஷ்டே தி3க்த4-தூ4ல்யங்கி3நம் த்வாம்
ஸததமிஹ தி3த்3ருக்ஷு: க்ஷாரிதா கோ3பிகாபி4:
த்ரபித-ரஹித! நீளா த்வாம் ஹஸேச்சாவலோக்ய
மரகதமணிவர்ண! மஞ்ஜநார்த2ம் த்வமேஹி9

ஸஜல-ஜலத4-நீலம் கேஶவம் ஶ்லாக4யித்வா
ப்ருது2ல-குச-யஶோதா3-ஸ்நாபநீய-ப்ரகாரம்
ப்ரதி2த-நக3ர-நேது: விஷ்ணுசித்தஸ்ய பத்3யம்
4ரித-த்3ரமிட3மம்ருதம் ய: படே2த் தஸ்ய ஶம் ஸ்யாத்10

समापनम् :-
     एतावता, जलभरितमेघायमानशरीरिणे कृष्णाय, आश्रितानां सुलभभूतं तं शिशुरुपं भगवन्तं श्लाघयित्वा, निचोल-दुर्ग्रह-पीनस्तनभरया यशोदया कृतं स्नपनप्रकारं, जङ्गमस्थावरभरिते भुवनेऽस्मिन् पुराणेषु विख्यात (श्रीविल्लिपुत्तूर्) श्रीधन्विनव्यनगरनेत्रा पेरियाழ்वार् नाम्ना भट्टनाथेन श्रीविष्णुचित्तेन, शब्दलक्षणसौष्ठवैर्मनोहरायां भगवद्गुणभरितायां शब्दप्रसादेन आविष्कृतार्थगौरवात्मिकायां अमृतमयायां द्रमिडभाषायां
कृतानि पद्यानि पठितारः श्रोतारश्च दुरितदूराः भवन्ति ॥

ஸமாபநம்:-
     ஏதாவதா, ஜலப4ரிதமேகா4யமாந ஶரீரிணே க்ருஷ்ணாய, ஆஶ்ரிதாநாம் ஸுலப4பூ4தம் தம் ஶிஶுரூபம் ப4கவந்தம் ஶ்லாக4யித்வா, நிசோல-து3ர்க்3ரஹ-பீன-ஸ்தநப4ரயா யஶோத3யா க்ருதம் ஸ்நபனப்ரகாரம், ஜங்க3மஸ்தா2வரப4ரிதே பு4வநே (அ)ஸ்மின் புராணேஷு விக்2யாத (ஸ்ரீவில்லிபுத்தூர்) ஸ்ரீத4ந்விநவ்ய நக3ரநேத்ரா பெரியாழ்வார் நாம்நா ப4ட்டநாதே2ந ஸ்ரீவிஷ்ணுசித்தேன, ஶப்33லக்ஷண ஸௌஷ்ட2வைர்மநோஹராயாம் ப43வத்3கு3ணப4ரிதாயாம் ஶப்33ப்ரஸாதே3ன ஆவிஷ்க்ருதார்த்த2 கௌ3ரவாத்மிகாயாம் அம்ருதமயாயாம் த்3ரமிட3பா4ஷாயாம் க்ருதாநி பத்3யாநி படி2தார: ஶ்ரோதாரஶ்ச து3ரிததூ3ரா: ப4வந்தி

முடிவுரை:-

     இப்படியாக, செழுமையான கருநிற மேகத்தைப்போன்றத் திரு மேனியையுடைய கண்ணனை உகந்து,  செழுமையான கொங்கை யையுடைய யசோதை, அவனை நீராட்டிய விதத்தை, இப்பூவுல கில் செழுமையான வளங்களையுடையதும் மிகத்தொன்மையானது மான திருப்புதுவைப்பிரானான பெரியாழ்வாரால், இலக்கிய-இலக்கணங்களாலும், சொல்-பொருள்-கருத்துகளின் செறிவுகளா லும், இறைவனது இயல்புகளைத் தன்னகத்தே நிறைத்தும் செழுமையான செந்தமிழில் பாடப்பெற்ற பாசுரங்களைப் படிப் பவர்க்கும், கேட்பவர்க்கும் தீவினைகள் எல்லாம் ஒழிந்து நல்வினை
கள் பற்பல ஏற்படமென்பது திண்ணம்.


    इत्थं समर्पयति,
              श्रीमद्वेदान्तरामानुज-श्रीमच्छ्रीनिवासरामानुज-                            श्रीमद्रङ्गरामानुज-श्रीमद्वराहमहादेशिकानां
                                                                पदपद्मपांशु:

ஸ்ரீமுஷ்ணம், புராணம்,
வங்கீபுரம், நியாயஶிரோமணி,
ஸம்ஸ்க்ருத ஸாஹிதீ வல்லப,
முனைவர் வ.ஸெளம்யநாராயணன்,
            தலைவர், வடமொழித்துறை,
து.கோ.வைணவக்கல்லூரி,
அரும்பாக்கம்,சென்னை.106.


A SHORT TREATISE ON SANSKRIT PROSODY - Part I

       PROSODY means the study of poetry.  In Sanskrit it is called Chandas or Vruttam.     The earliest and most important work in Sanskrit...