Wednesday, 2 November 2022

20 SLOKAS PRESENTING THE PROMINENT FEATURES OF THE LORD KRISHNA

 

 

 

  


Divyadesam is a holy place where the Lord Vishnu resides with different postures or forms and the Lord is being praised and sung His glory (Naalaayira Divya Prabandham) by the famous twelve Shri Vaishnava Saints so called as Azhvars in Tamil. There are about 108 Divyadesams among Shri Vaishnava Temples, in India and Nepal.  Among them, Tiruvallikkeni in Chennai is a Divyadesam where the Lord Sri Partha Sarathi is the presiding deity.  Peyaazhvar, Thirumazhisaiyazhvar and Thirumangai Azhvar sang pasurams (Holy Hymns in Tamil) here in praising the presiding deity.  The speciality of the temple is such that pilgrims from around the world throng here to have the darshan of the Lord.  

Apart from Azhvars, there are many scholars, poets, musicologists who rendered several compositions of slokas, keerthanas and pasurams on the Lord Gitachaaryan.  Likewise, in the year 2022, a Sanskrit scholar has composed twenty stanzas on the Lord with the title Sri Paartha Saarathi Prapatthi in Sanskrit language abiding to the rules of the metres like Sragdharaa, Vasantha Thilakam and Indra Vajra.

These twenty stanzas finely covers the Annual festival  (Brahmotsava) when the Lord Sri Paartha Saarathi is taken out in procession in different vehicles (Vaahanams).  Each stanza deals with a beauty and the wonderful sight of the Lord adorning His vehicles.  The translation and the transliteration of the Sanskrit stanzas in Tamil is also given below.

Readers can reach the author G Gopala Krishna for English and Sanskrit Commentaries.

श्रीपार्थसारथिप्रपत्तिः

श्रीशश्चासौ विकुण्ठो हरिरिति कथितो दीक्षया त्रायमाणः

शस्त्रैश्चक्रादिरूपैश्चरति कथमिहाश्चर्यभूतं विचित्रम्।

युद्धक्षेत्रे निरस्त्रस्तुरगखुररजोलङ्कृतश्रान्तदेही

वर्मीकृत्यस्वदेहं विजयमवति यस्सारथिः पातुनस्सः।।

        

        

धर्माय लोकमवतीर्य विचित्रकेलिः              यद्भाःप्रभावफलितोऽयमुदीरितोऽत्र

दूतस्ततोऽपि मनुजस्य बभूव सूतः।          साक्षीति धाम जगतो महतां गुणानाम्।

तं धर्मरक्षकमधिष्ठितधर्मपीठं                  बिभ्राजमानमिनमण्डलमध्यवृत्तं

पार्थस्य सारथिमहं शरणं प्रपद्ये ।।         पार्थस्य सारथिमहं शरणं प्रपद्ये।।

 

वस्त्रापहारविधया शिखिपिञ्छमौलिः         संसारघोरमरुभूमिषु दह्यमानः

देहाभिमानमपनीय कृपां चकार               तापत्रयैस्तपनतप्त इवौषधीशम्।

आरूढनीपममलं तमनन्तवीर्यं                  पूर्णेन्दुनन्दनमिमं ह्यधिरूढचन्द्रं

पार्थस्य सारथिमहं शरणं प्रपद्ये।।          पार्थस्य सारथिमहं शरणं प्रपद्ये।।

 

देव्या श्रिया वसुधया परिसेव्यमानम्         योनिस्समस्तजगतां जननीयसि त्वं

आसीनमादिपुरुषं प्रथितप्रभावम्।             पुष्णासि लोकममृतेक्षणशीतदृग्भिः।

शेषित्वबोधनधिया भुजगाधिरूढं               त्वां मातृरूपिणमसीमदयान्तरङ्गं

पार्थस्य सारथिमहं शरणं प्रपद्ये।।          पार्थस्य सारथिमहं शरणं प्रपद्ये।।

        

चाणूरमुष्टिकबकासुरचेदिपान् वै               आबालगोपवनितारमणाद्धि रामः

व्यापाद्य सिंह इव मत्तगजान् बभौ यः।      कोदण्डदण्डरहितोऽपि धनुर्बभञ्ज।

ब्रह्मादिवन्दितमधिष्ठितसिंहपृष्ठं           दुःखापहं हनुमदंसगतं हरीशं

पार्थस्य सारथिमहं शरणं प्रपद्ये।।          पार्थस्य सारथिमहं शरणं प्रपद्ये।।  १०

 

आकाशमार्गमधिगम्य विभासमानं           आनन्दपूर्णनिलये परमे विमाने

वेदान्तवेद्यमिह गोपजनैश्चरन्तम्         आसेविताङ्घ्रियुगलं रमणीयगात्रं।

आरुह्य तार्क्ष्यमिभरक्षणसाक्षिभूतं           प्राप्यं ह्युपायमतुलं भवरोगवैद्यं

पार्थस्य सारथिमहं शरणं प्रपद्ये।।         पार्थस्य सारथिमहं शरणं प्रपद्ये।।  ११

 

लोकस्य दुःखमपनेतुमुदारचेताः               पापानि कुञ्जरवद् अद्भुतपाटवानि

गीतासुधामुपदिदेश तमोऽरुणच्च।            कामादिषड्रिपुवशात् समुपार्जितानि।   

हंसाधिरूढमसितञ्च तमायताक्षं               मोक्तुं मामघगजाद्धि गजाधिरूढं

पार्थस्य सारथिमहं शरणं प्रपद्ये।। पार्थस्य सारथिमहं शरणं प्रपद्ये।। १२

        

चक्राणि यस्य विलसन्ति जगद्रथस्य         देव्योश्च कोमलतनू परिषेचयन्तं

वेदाश्च वाजिन इनोडुपती केतुः।            प्रेमातिशायितदृशा शिबिकाधिरूढम्।
धर्मोहि तद्रथिकपालितलोकहेतुः               पीयूषपूर्णकमलायतचारुनेत्रं

पार्थस्य सारथिमहं शरणं प्रपद्ये।। १३       पार्थस्य सारथिमहं शरणं प्रपद्ये।। १६

 

यत्सत्त्वमर्चितपदं चिदचिच्छरीरं              रत्नानि गर्वितमनांस्युपगम्य तं वै

नन्दस्य धाम्न्यलकशोभितमुग्धरूपम्।         अश्मानिकश्मलयुतान्यविदुस्स्वभावम्।

लीलाकलापनवनीतविलिप्तदेहं                वज्रैरलङ्कृततनुं वरदं वदान्यं

पार्थस्य सारथिमहं शरणं प्रपद्ये।।        पार्थस्य सारथिमहं शरणं प्रपद्ये।। १७

 

अश्वोऽपि निग्रहविदो वशमेति लोके          यः कैरविण्यनतिदूरविराजमानः

यानीन्द्रियाणि तु ममातिबलान्वितानि।         श्रीभूसमेतशरणागतकल्पवृक्षः।

आरूढवाजिनमिमानि निरोद्धुकामः          श्रीपादचिह्नितवरैःपरिचर्यमाणः

पार्थस्य सारथिमहं शरणं प्रपद्ये।। १५       तं पार्थसारथिमहं शरणं प्रपद्ये।। १८

 

यः स्तौति कृष्णं ह्यनया प्रपत्त्या भक्त्या गोविन्दपदाश्रितस्सन्।

दुःखानि मुञ्चन्ति तदीक्षणेन कल्याणमाप्नोति तमीडकञ्च।।

 

ஸ்ரீபார்த்தஸாரதிப்ரபத்தி:

ஸ்ரீஶஶ்சாஸௌ விகுண்டோ ஹரிரிதி கதிதோ தீக்ஷயா த்ராயமாண:

ஶஸ்த்ரைஶ் சக்ராதிரூபைஶ் சரதி கதமிஹாஶஂசரஂயபூதம் விசித்ரம் |

       யுத்தக்ஷேத்ரே நிரஸ்த்ரஸ் துரககுரரஜோ()லங்க்ருதஶ்ராந்த தேஹீ

       வர்மீக்ருத்ய ஸ்வதேஹம் விஜயமவதி யஸ் ஸாரதி: பாது நஸ் : ||

தர்மாய லோகமவதீர்ய விசித்ரகேளி:

தூதஸ்ததோ()பி மனுஜஸ்ய பபூவ ஸூத: |

            தம் தர்மரக்ஷகம் அதிஷ்டித தர்மபீட

             பார்த்தஸ்ய ஸாரதிமஹம் ஶரணம் ப்ரபத்யே ||  1

 

          வஸ்த்ராபஹாரவிதயா ஶிகிபிஞ்சமௌளி:

            தெஹாபிமானம் அபனீய க்ருபாம் சகார |

            ஆரூடநீபமமலம் தமநந்தவீர்யம்

            பார்த்தஸ்ய ஸாரதிமஹம் ஶரணம் ப்ரபத்யே || 2

 

          தேவ்யா ஶ்ரியா வஸுதயா பரிஸேவ்யமாநம்

            ஆஸீநம் ஆதிபுருஷம் ப்ரதிதப்ரபாவம்|

            ஶேஷித்வபோதநதியா புஜகாதிரூடம்

            பார்த்தஸ்ய ஸாரதிமஹம் ஶரணம் ப்ரபத்யே || 3

         

          சாணூர முஷ்டிக பகாஸுர சேதிபான் வை

            வ்யாபாத்ய ஸிம்ஹ இவ மத்தகஜான் பபௌ :|

            ப்ரஹ்மாதி  வந்திதம் அதிஷ்டிதஸிம்ஹப்ருஷ்டம்

            பார்த்தஸ்ய ஸாரதிமஹம் ஶரணம் ப்ரபத்யே || 4

 

            ஆகாஶமார்கம் அதிகம்ய விபாஸமானம்

            வேதாந்தவேத்யமிஹ கோபஜனைஶ் சரந்தம்|

            ஆருஹ்ய தார்க்ஷ்யம் இபரக்ஷண ஸாக்ஷிபூதம்

            பார்த்தஸ்ய ஸாரதிமஹம் ஶரணம் ப்ரபத்யே|| 5

 

            லோகஸ்ய து:க்கம் அபனேதும் உதாரசேதா:

            கீதாஸுதாம் உபதிதேஶ தமோ()ருணச்ச|

            ஹம்ஸாதிரூடம் அஸிதம்ச தமாயதாக்ஷம்

            பார்த்தஸ்ய ஸாரதிமஹம் ஶரணம் ப்ரபத்யே|| 6

 

          யத்பா:ப்ரபாவ பலிதோ()யமுதீரதோ()த்ர

            ஸாக்ஷீதி தாம ஜகதோ மஹதாம் குணானாம்|

            பிப்ராஜமானம் இனமண்டலமத்யவ்ருத்தம்

            பார்த்தஸ்ய ஸாரதிமஹம் ஶரணம் ப்ரபத்யே|| 7

 

          ஸம்ஸாரகோரமருபூமிஷு  தஹ்யமான:

            தாபத்ரயைஸ் தபனதப்த இவௌஷதீஶம் |

            பூர்ணேந்துநந்தனமிமம் ஹ்யதிரூடசந்த்ரம்

            பார்த்தஸ்ய ஸாரதிமஹம் ஶரணம் ப்ரபத்யே || 8

 

          யோநிஸ் ஸமஸ்த ஜகதாம் ஜனனீயஸி த்வம்

            புஷ்ணாஸி லோகம் அம்ருதேக்ஷணஶீதத்ருக்பி:|

         த்வாம் மாத்ருரூபிணம் அஸீமதயாந்தரங்கம்

            பார்த்தஸ்ய ஸாரதிமஹம் ஶரணம் ப்ரபத்யே || 9

 

            ஆபாலகோபவனிதாரமணாத்தி ராம:

            கோதண்டதண்டரஹிதோ()பி தநுர்பபஞ்ஜ|

            து:க்காபஹம் ஹனுமதம்ஸகதம் ஹரீஶம்

            பார்த்தஸ்ய ஸாரதிமஹம் ஶரணம் ப்ரபத்யே || 10

 

            ஆநந்தபூர்ணநிலயே பரமே விமாநே

            ஆஸேவிதாங்க்ரி்யுகளம் ரமணீயகாத்ரம்|

            ப்ராப்யம் ஹ்யுபாயமதுலம் பவரோகவைத்யம்

            பார்த்தஸ்ய ஸாரதிமஹம் ஶரணம் ப்ரபத்யே || 11

 

          பாபானி குஞ்ஜரவத் அத்புதபாடவானி

            காமாதிஷடஂரிபுவஶாத் ஸமுபார்ஜிதானி|

            மோக்தும் மாம் அககஜாத்தி கஜாதிரூடம்

            பார்த்தஸ்ய ஸாரதிமஹம் ஶரணம் ப்ரபத்யே|| 12

 

          சக்ராணி யஸ்ய விலஸந்தி ஜகத்ரதஸ்ய

            வேதாஶ்ச வாஜின இனோடுபதீ கேது: |

            தர்மோ ஹி தத்ரதிகபாலிதலோகஹேது:

            பார்த்தஸ்ய ஸாரதிமஹம் ஶரணம் ப்ரபத்யே|| 13

 

          யத்  ஸத்த்வமர்சிதபதம் சிதசித் ஶரீரம்

            நந்தஸ்ய தாம்ந்யலக ஶோபித முக்தரூபம்|

            லீலாகலாபநவநீதவிலிப்ததேஹம்

            பார்த்தஸ்ய ஸாரதிமஹம் ஶரணம் ப்ரபத்யே||  14

 

            அஶ்வோ()பி நிக்ரஹவிதோ வஶமேதி லோகே

            யாநீந்த்ரியாணி து மமாதிபலான்விதானி|

            ஆரூடவாஜினம் இமானி நிரோத்துகாம:

            பார்த்தஸ்ய ஸாரதிமஹம் ஶரணம் ப்ரபத்யே || 15

 

          தேவ்யோஶ்ச கோமலதநூ பரிஷேசயந்தம்

            ப்ரேமாதிஶாயித த்ருஶா ஶிபிகாதிரூடம்|

            பீயூஷபூர்ணகமலாயதசாருநேத்ரம்

            பார்த்தஸ்ய ஸாரதிமஹம் ஶரணம் ப்ரபத்யே || 16

 

          ரத்னானி கர்விதமநாம்ஸி உபகம்ய தம் வை

            அஶ்மானி கஶஂமலயுதானி அவிதுஸ்ஸ்வபாவம்|

            வஜ்ரைரலங்க்ருததநும் வரதம் வதான்யம்

            பார்த்தஸ்ய ஸாரதிமஹம் ஶரணம் ப்ரபத்யே || 17

 

          : கைரவிண்யநதிதூரவிராஜமாந:

            ஸ்ரீபூஸமேதஶரணாகதகல்பவ்ருக்ஷ:|

            ஸ்ரீபாதசிஹ்னிதவரை: பரிசர்யமான:

            தம் பார்த்தஸாரதிமஹம் ஶரணம் ப்ரபத்யே ||  18

 

: ஸ்தௌதி க்ருஷ்ணம் ஹ்யநயா ப்ரபத்யா பக்த்யா கோவிந்தபதாஶ்ரிதஸ் ஸன்|

து:க்கானி முஞ்சந்தி ததீக்ஷணேன கல்யாணமாப்நோதி தமீடகஞ்ச ||

 

  

ஸ்ரீபார்த்தஸாரதிப்ரபத்தி:

 

ஸ்ரீஶஶ்சாஸௌ விகுண்டோ ஹரிரிதி கதிதோ தீக்ஷயா த்ராயமாண:

ஶஸ்த்ரைஶ் சக்ராதிரூபைஶ் சரதி கதமிஹாஶஂசரஂயபூதம் விசித்ரம் |

யுத்தக்ஷேத்ரே நிரஸ்த்ரஸ் துரககுரரஜோ()லங்க்ருதஶ்ராந்த தேஹீ

வர்மீக்ருத்ய ஸ்வதேஹம் விஜயமவதி யஸ் ஸாரதி: பாது நஸ் : ||

திருமகள்நாதனென்றும் வைகுண்டனென்றும் ஹரி என்றும் சொல்லப்படுபவனும், சக்ரம் முதலிய வடிவங்களுடன் கூடிய ஆயுதங்களால் அனைவரையும் காக்கவேண்டும் என்ற தீர்மானங்கொண்டு இங்கு(திருவல்லிக்கேணியிலே) எப்படி ஸஞ்சரிக்கின்றான் என்பதே வியப்பு. மேலும் போர்க்களத்தில், ஆயுதங்களைத் தரிக்காமலும், குதிரைகளின் குளம்புகளால் ஏற்பட்டப் புழுதிகளால் அலங்கரிக்கப்பட்ட களைத்த உடம்பையுடயவனும், தனது உடம்பையே தனக்கு கவசமாகக் கொண்டு எவன் ஒருவன் தேரோட்டியாயிருந்து அர்ஜுனனைக் காப்பாற்றினானோ அந்த பார்த்தஸாரதியான பகவான் ஸ்ரீக்ருஷ்ணன் நம்மைக் காப்பாற்றட்டும்.

            தர்மாய லோகமவதீர்ய விசித்ரகேளி:

            தூதஸ்ததோ()பி மனுஜஸ்ய பபூவ ஸூத: |

            தம் தர்மரக்ஷகம் அதிஷ்டித தர்மபீடம்

             பார்த்தஸ்ய ஸாரதிமஹம் ஶரணம் ப்ரபத்யே ||  1

தர்மாதிபீடம் - வியக்கத்தக்க விளையாட்டையுடையவனும், தர்மத்தைக் காக்க இவ்வுலகில் அவதரித்தவனும், மேலும் மனிதர்களுக்காகத் தூதுவனாகவும், தேரோட்டியாகவும் விளங்கியவன் எவனோ, அந்த தர்மத்தைக் காபாற்றியவனும், தர்மபீடத்தை நிலை நிறுத்தியவனும், அர்ஜுனனுக்குத் தேரோட்டியுமான  ஸ்ரீபார்த்தஸாரதியைத் தஞ்சமடைகின்றேன்.

            வஸ்த்ராபஹாரவிதயா ஶிகிபிஞ்சமௌளி:

            தேஹாபிமானம் அபனீய க்ருபாம் சகார |

            ஆரூடநீபமமலம் தமநந்தவீர்யம்

            பார்த்தஸ்ய ஸாரதிமஹம் ஶரணம் ப்ரபத்யே || 2

புன்னைமரவாஹனம் - மயிலிறகைத்தலையில் சூடியவனும், உடல்மேலுள்ள பற்றைப் போக்க கோபியர்களின் துணிகளை, அவர்கள் தடாகத்தில் குளிக்கும்போது, நீபம் என்னும் கடம்பமரத்தின் மேலேறி அபகரித்துச் சென்று ஒளித்தவனும், எல்லையற்ற வீரம் கொண்டவனும் அர்ஜுனனுக்குத் தேரோட்டியுமான ஸ்ரீபார்த்தஸாரதியை அடைக்கலம் கொண்டேன்.

          தேவ்யா ஶ்ரியா வஸுதயா பரிஸேவ்யமாநம்

            ஆஸீநம் ஆதிபுருஷம் ப்ரதிதப்ரபாவம்|

            ஶேஷித்வபோதநதியா புஜகாதிரூடம்

            பார்த்தஸ்ய ஸாரதிமஹம் ஶரணம் ப்ரபத்யே || 3

ஶேஷவாஹனம் - ஸ்ரீதேவிபூதேவியுடன் ஸேவைத் தருபவனும், ஆதிபுருஷனும், புகழப்படும் பெருமைகளைக் கொண்டவனும், அனைத்து ஜீவராஶிகளுக்கும் யஜமானனாக இருக்கும் தன் நிலையை உணர்த்த ஆதிஶேஷன் மீது அமர்ந்திருப்பவனும், அர்ஜுனனுக்குத் தேரோட்டியுமான பார்த்தஸாரதியை நான் அடைக்கலம் கொண்டுள்ளேன்.

          சாணூர முஷ்டிக பகாஸுர சேதிபான் வை

            வ்யாபாத்ய ஸிம்ஹ இவ மத்தகஜான் பபௌ :|

            ப்ரஹ்மாதி  வந்திதம் அதிஷ்டிதஸிம்ஹப்ருஷ்டம்

            பார்த்தஸ்ய ஸாரதிமஹம் ஶரணம் ப்ரபத்யே || 4

ஸிம்ஹவாஹனம் - மதங்கொண்ட யானைகளை சிங்கம் ஒன்று நொறுக்குவதைப் போல், சாணூரன், முஷ்டிகன், பகாஸுரன், சிசுபாலன் முதலான தீயவர்களைக் கொன்று, ப்ரஹ்மா முதலானவர்களால் வணங்கத்தக்க ஸிம்ஹவாஹனத்தின்  மீது அமர்ந்தவனும், அர்ஜுனனது தேரோட்டியுமான பார்த்தஸாரதியை நான் தஞ்சம் அடைகின்றேன்.

            ஆகாஶமார்கம் அதிகம்ய விபாஸமானம்

            வேதாந்தவேத்யமிஹ கோபஜனைஶ் சரந்தம்|

            ஆருஹ்ய தார்க்ஷ்யம் இபரக்ஷண ஸாக்ஷிபூதம்

            பார்த்தஸ்ய ஸாரதிமஹம் ஶரணம் ப்ரபத்யே|| 5

கருடவாஹனம் - வான்வழியே மேற்கொண்டு, கஜேந்த்ரனைக் காப்பாற்றியதற்கு ஸாக்ஷியாக விளங்கிய கருடன் மீது அமர்ந்து, வேதாந்தங்களால் அறியத்தகுந்தவனாயிருநஂதுமஂ, கோபர்களுடன் உலவுபவனும், அர்ஜுனனது தேரோட்டியுமான  பார்த்தஸாரதியை நான் சரணடைகின்றேன்.

            லோகஸ்ய து:க்கம் அபனேதும் உதாரசேதா:

            கீதாஸுதாம் உபதிதேஶ தமோ()ருணச்ச|

            ஹம்ஸாதிரூடம் அஸிதம்ச தமாயதாக்ஷம்

            பார்த்தஸ்ய ஸாரதிமஹம் ஶரணம் ப்ரபத்யே|| 6

ஹம்ஸவாஹனம் - இப்பூவுலகின் துன்பத்தைப் போக்குவதற்காக, வள்ளல் மனம்படைத்து பகவத்கீதையை உபதேசித்தவனும், அதனால் அறிவினஂமை என்னும் இருளை ஒடுக்கியவனும், அன்னப்பறவையின் மீது அமர்ந்தவனும், கருநிறத்தவனும், அகன்ற கண்களையுடயவனும், அர்ஜுனனுடையத் தேரோட்டியுமான பார்த்தஸாரதியை நான் சரணடைகின்றேன்.

          யத்பா:ப்ரபாவ பலிதோ()யமுதீரதோ()த்ர

            ஸாக்ஷீதி தாம ஜகதோ மஹதாம் குணானாம்|

            பிப்ராஜமானம் இனமண்டலமத்யவ்ருத்தம்

            பார்த்தஸ்ய ஸாரதிமஹம் ஶரணம் ப்ரபத்யே|| 7

சூர்யப்ரபைவாஹனம்: - யாரொருவருடைய ஒளிபொருந்திய பெருமைகளால் பலன் இது என்று சொல்லப்பட்டும் அதைக் கண்கூடாக பெருமையான  குணங்களின் இருப்பிடமாகத்திகழ்வதும், சிறந்து ப்ரகாஶிக்கின்ற ஸூர்யனுடைய மண்டலத்தின் நடுவில் அழகாகத்  திகழ்பவனும்,  பார்த்தனுக்குத் தேரோட்டியவனுமான  ஸ்ரீபார்த்தஸாரதியை ஶரணம் அடைகின்றேன்.

          ஸம்ஸாரகோரமருபூமிஷு  தஹ்யமான:

            தாபத்ரயைஸ் தபனதப்த இவௌஷதீஶம் |

            பூர்ணேந்துநந்தனமிமம் ஹ்யதிரூடசந்த்ரம்

            பார்த்தஸ்ய ஸாரதிமஹம் ஶரணம் ப்ரபத்யே || 8

சந்த்ரப்ரபை வாஹனம் - பிறப்பிறப்புடைய கோரமான  பாலைவனங்களில் கொளுத்தும் சூட்டிலிருந்து, ஆதஂயாதஂமிகமஂ ஆதிதைவிகமஂ ஆதிபௌதிகமஂ என்னும் மூன்றுவிதக் கொடியதாபம் என்னும் சூரியனால் தபித்து துயரடைந்தவர்களுக்குக் குளிர்ச்சியை ஊட்டவல்ல சந்திரன் போன்றவனும், முழுநிலாவைப்போல் மகிழ்ச்சியை அளிப்பவனும், அல்லிமலரையுடைய திருவல்லிக்கேணியில் சந்த்ரனின் மீது பவனி வருபவனும், அர்ஜுனனுக்குத் தேரைச் செலுத்தியவனுமான, ஸ்ரீபார்த்தஸாரதியை தஞ்சம் அடைகின்றேன்.

          யோநிஸ் ஸமஸ்த ஜகதாம் ஜனனீயஸி த்வம்

            புஷ்ணாஸி லோகம் அம்ருதேக்ஷணஶீதத்ருக்பி:|

         த்வாம் மாத்ருரூபிணம் அஸீமதயாந்தரங்கம்

            பார்த்தஸ்ய ஸாரதிமஹம் ஶரணம் ப்ரபத்யே || 9

மோஹினீ அவதாரம் - அனைத்து மக்களுக்கும் பிறக்கக் காரணமாயுள்ள தாயைப் போன்று நடந்துக்கொள்ளும் நீ,உனது அமுதக்கடைக்கண்களின் குளிர்ச்சியான  பார்வையால் அனைவரையும் போஷிக்கிறாய். எல்லையற்ற கருணையைத் தன்னகத்தே கொண்டு அன்னையுருவம் கொண்டவனும், அர்ஜுனனுக்காகத்  தேரைச் செலுத்தியவனுமான ஸ்ரீ பார்த்தஸாரதியான  உன்னைச் சரணடைகின்றேன்.

            ஆபாலகோபவனிதாரமணாத்தி ராம:

            கோதண்டதண்டரஹிதோ()பி தநுர்பபஞ்ஜ|

            து:க்காபஹம் ஹனுமதம்ஸகதம் ஹரீஶம்

            பார்த்தஸ்ய ஸாரதிமஹம் ஶரணம் ப்ரபத்யே || 10

ஹனுமந்த வாஹனம் - குழந்தைகள் முதற்கொண்டு, கோபர்கள் மற்றும் கோபியர்களுடன் விளையாடி மகிழ்விக்கும் குணமுடையான் என்பதாலும் பகவான் ராமனைப்போன்று தான் கோதண்டம் என்னும் வில்லை முறிக்கவில்லையென்றாலும் கம்ஸனுடைய   தநுர்யாகத்தில் வில்லையொடித்தான். அப்படி அந்த ராமனாக அனுமனின் தோளின் மீது அமர்ந்து விளங்கும், குரங்குகளின் தலைவனுக்கெல்லாம் தலைவனும், துயரத்தை நீக்குபவனும், அர்ஜுனனது தேரோட்டியானவனுமான  ஸ்ரீபார்த்தஸாரதியைச் சரணடைகின்றேன்.

            ஆநந்தபூர்ணநிலயே பரமே விமாநே

            ஆஸேவிதாங்க்ரி்யுகளம் ரமணீயகாத்ரம்|

            ப்ராப்யம் ஹ்யுபாயமதுலம் பவரோகவைத்யம்

            பார்த்தஸ்ய ஸாரதிமஹம் ஶரணம் ப்ரபத்யே || 11

ஆனந்தவிமானம் - ஆனந்தம் முழுவதுமாய் பரந்து விளங்கும் ஆனந்த விமானத்தில் எல்லோராலும் வணங்கக்கூடிய திருவடிகளை உடையவனும், அழகிய திருமேனியுடையவனும், ப்ராப்யனும் அதாவது அடையக்கூடியவனும், ப்ராப்யோபாயமானவனும் அதாவது அடைவதற்கேற்ற  உய்யும் வழியாயிருப்பவனும் இப்பிறவிப்பெருங்கடலால் ஏற்பட்ட நோயை அகற்றும் மருத்துவனும், அர்ஜுனனுக்காகத் தேரோட்டியவனுமான ஸ்ரீபார்த்தஸாரதியைச் சரணடைகின்றேன்.

          பாபானி குஞ்ஜரவத் அத்புதபாடவானி

            காமாதிஷடஂரிபுவஶாத் ஸமுபார்ஜிதானி|

            மோக்தும் மாம் அககஜாத்தி கஜாதிரூடம்

            பார்த்தஸ்ய ஸாரதிமஹம் ஶரணம் ப்ரபத்யே|| 12

யானைவாஹனம் - பாபங்கள் யானையைப் போன்று பெரியதாக வியக்கவைக்ககூடியவை, அத்தகைய பாவங்கள், ஆசை, கோபம், மதிமயக்கம், பேராசை, திமிர், பொறாமைப் போன்ற உண்ர்வுசார்ந்த எதிரிகளை நான் என்னுள் கொண்டுள்ளேன். அப்படிப்பட்ட யானையைப் போன்ற பெருத்தபாபங்களிலிருந்து என்னை விடுவிக்க யானைமீது அமர்ந்து வலம் வருபவனும், அர்ஜுனனுக்குத் தேரோட்டியுமான ஸ்ரீபார்த்தஸாரதியைச் சரணடைகின்றேன்.

          சசக்ராணி யஸ்ய விலஸந்தி ஜகத்ரதஸ்ய

            வேதாஶ்ச வாஜின இனோடுபதீ கேது: |

            தர்மோ ஹி தத்ரதிகபாலிதலோகஹேது:

            பார்த்தஸ்ய ஸாரதிமஹம் ஶரணம் ப்ரபத்யே|| 13

திருத்தேர் - எந்த பகவானுடைய உலகமாகிய இந்த ரதத்தில்,  வேதங்கள் குதிரைகளாகவும், ஸூரியனும் சந்திரனும் சக்ரங்களாகவும், அந்த ரதத்திலுள்ள பகவானால் காக்கப்பட்ட தர்மமே கொடியாக் விளங்குகிறதோ, அப்படிப்பட்ட அந்த அர்ஜுனனுக்காக தேரோட்டிய ஸ்ரீபார்த்தஸாரதியைச் சரணடைகின்றேன்.

          யத்  ஸத்த்வமர்சிதபதம் சிதசித் ஶரீரம்

            நந்தஸ்ய தாம்ந்யலக ஶோபித முக்தரூபம்|

            லீலாகலாபநவநீதவிலிப்ததேஹம்

            பார்த்தஸ்ய ஸாரதிமஹம் ஶரணம் ப்ரபத்யே||  14

வெண்ணைத்தாழி கண்ணன் கோலம் - எல்லோராலும் பூஜிக்கதக்க திருவடியையும் அல்லது இருப்பிடத்தையுமுடைய ஸத்த்வம் என்ற நன்மையே உருவானவனும், அறிவுள்ளதும் அறிவற்றதுமான திருமேனியை உடையவனும், நந்தகோபரது வீட்டில் குழற்கற்றையினால் அலங்கரிக்கப்பட்டதும் மயக்கந்தருவதுமான வடிவத்தையுடையவனும், விளையாட்டுத்தனமாக வெண்ணையைத் தன் மீது  அப்பிப்பூசிக்கொண்ட திருமேனியை உடையவனும், அர்ஜுனனுக்காகத்  தேரோட்டிய ஸ்ரீ பார்த்தஸாரதியை நான் சரணம் அடைகின்றேன்.

            அஶ்வோ()பி நிக்ரஹவிதோ வஶமேதி லோகே

            யாநீந்த்ரியாணி து மமாதிபலான்விதானி|

            ஆரூடவாஜினம் இமானி நிரோத்துகாம:

            பார்த்தஸ்ய ஸாரதிமஹம் ஶரணம் ப்ரபத்யே || 15

குதிரை வாஹனம் - எந்த இந்த்ரியங்களின் (புலன்கள்) மிகவும் பலங்கொண்டு வண்மையான முறையில் அங்கிங்கெனாதபடி அலைகின்றனவோ அப்படிப்பட்ட குதிரைகளைக் கட்டுப்படுத்தத் தெரிந்தவனிடம் அடங்குகின்றன. அப்படிப்பட்ட அடங்காகுதிரைகளாகத் திகழ்கின்ற  எனது இந்த இந்த்ரியங்கள் மீது சவாரி செய்து அவைகளை அடக்குவதன் பொருட்டு விளங்குபவனும் அர்ஜுனனுக்குத் தேரோட்டியானவனுமான ஸ்ரீபார்த்தஸாரதியை நான் ஶரணமடைகின்றே்ன்..

          தேவ்யோஶ்ச கோமலதநூ பரிஷேசயந்தம்

            ப்ரேமாதிஶாயித த்ருஶா ஶிபிகாதிரூடம்|

            பீயூஷபூர்ணகமலாயதசாருநேத்ரம்

            பார்த்தஸ்ய ஸாரதிமஹம் ஶரணம் ப்ரபத்யே || 16

பல்லக்கு ஸேவை - தனது மனைவிகளான ஸ்ரீதேவி மற்றும் பூதேவியினுடைய மென்மையான  தேகங்களைத் தனது காதல் மிகுந்த பார்வையால் குளிர்வித்துக் கொண்டு பல்லக்கின் மீதமர்ந்தவனும், அம்ருதம் ததும்பும் தாமரைப்போன்ற  அகன்று நீண்ட அழகியக் கண்களையுடையவனும், அர்ஜுனனுக்காகத் தேரோட்டியவனுமான   ஸ்ரீபார்த்தஸாரதியைச் சரணடைகின்றேன்.

          ரத்னானி கர்விதமநாம்ஸி உபகம்ய தம் வை

            அஶ்மானி கஶஂமலயுதானி அவிதுஸ்ஸ்வபாவம்|

            வஜ்ரைரலங்க்ருததநும் வரதம் வதான்யம்

            பார்த்தஸ்ய ஸாரதிமஹம் ஶரணம் ப்ரபத்யே || 17

வஜ்ரகவச ஸேவை - செருக்கு/ திமிர் கொண்ட மனங்களை, அவை அழுக்கடைந்தக் கற்களென்று உணரவைத்தவனும், அதனாலேயே நமது அழுக்கடைந்த மனங்களை ரத்தினக் கற்களாக  மாற்றி அவைகளை வஜ்ரம் அதாவது வைரகற்களுடன் ஸேர்த்து அலங்கரித்துக் கொண்ட திருமேனியையுடையவனும், வரமளிப்பவனும், இல்லையென்று சொல்லாத பெரும் வள்ளலும், அர்ஜுனனுக்காகத்  தேரோட்டியவனுமான ஸ்ரீபார்த்தஸாரதியை நான் சரணமடைகின்றேன்.

          : கைரவிண்யநதிதூரவிராஜமாந:

            ஸ்ரீபூஸமேதஶரணாகதகல்பவ்ருக்ஷ:|

            ஸ்ரீபாதசிஹ்னிதவரை: பரிசர்யமான:

            தம் பார்த்தஸாரதிமஹம் ஶரணம் ப்ரபத்யே ||  18

கைரவிணீ என்னும் அல்லிகுளத்துக்கு மிக அருகில் அழகாகத் திகழ்ந்து விளங்குபவனும், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி என்னும் தன் மனைவிகளுடன் தன்னைச் சரணமடைந்தைவர்களுக்கு விரும்பியதைத் தந்திடும் கல்பகமரமாக விளங்குபவனும், தங்களது திருமேனிகளில் பகவானது திருவடிகளைத் தரித்தவர்களால் (ஸ்ரீபாதம் தாங்கிகள்) செய்யப்பட்டத் திருப்பணிகளை களிப்புடன் மகிழ்ந்தேற்றுக்கொள்பவனும், அர்ஜுனனுக்குத் தேரோட்டியவனுமான   ஸ்ரீபார்த்தஸாரதியை நான் ஶரணம் அடைகின்றேன்.

: ஸ்தௌதி க்ருஷ்ணம் ஹ்யநயா ப்ரபத்யா பக்த்யா கோவிந்தபதாஶ்ரிதஸ் ஸன்|

து:க்கானி முஞ்சந்தி ததீக்ஷணேன கல்யாணமாப்நோதி தமீடகஞ்ச ||

இந்த ஸ்ரீபார்த்தஸாரதிப்ரபத்தி என்னும் ஶஂலோகங்களின் மூலம், மிகவும் பக்தியுடன், கோவிந்தன் மற்றும் க்ருஷ்ணன் என்னும் ஸ்ரீபார்த்தஸாரதிப் பெருமாளின் திருவடிகளை அடைக்கலமடைந்து எவனொருவன் ஸ்துதிக்கின்றானோ, அந்தப் பெருமாளின் கருணைக்கொண்டப் பார்வையால், அவனது வருத்தங்கள் எல்லாம் அவனைவிட்டு விலகி, அப்படித்துதித்த அவனை நன்மைகள் வந்து சேர்கின்றன. ஸ்ரீபார்த்தஸாரதி ப்ரபத்தி சம்பூர்ணம்

____

Tamil Commentary by : Dr. V. Sowmyanarayanan,

Read the Slokas and receive the blessings of the Lord.  Do share your views in the comments below and for further clarifications, drop a mail to the author: gkrishna0302@gmail.com

 

 

 



No comments:

Post a Comment

Selected Slokas from the Srimad-Ramayanam

            The following verses are selected from the Srimad Ramayanam of Sri Valmiki.   According to Indian tradition, Ramayanam is the ...