வேதங்களில்
ஸூக்ஷ்மமாகச் சொல்லப்பட்ட
வைகளை அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம்,
இந்த ஆகமங்கள்
இயற்றப்பட்டன. ஒவ்வொரு
ஆகமங்களிலும் சர்யா, க்ரியா,
யோகம் மற்றும்
ஜ்ஞாநம்
என்ற நான்கு வகைப் பிரிவுகளைக்
காணலாம்.
இவையனைத்தும் வழிபாட்டு முறை
களைத் திறம்பட எடுத்துரைக்கின்றன.
இந்த நான்கு
வகைப் பிரிவுகளில் முதல் பிரிவு
சர்யா என்பதாகும். இதற்குத் திருமூலர்,
எளிய நல் தீபம்
இடல் மலர்க்கொய்தல்
அளியின் மெழுகல் அதுதூர்த்தல் வாழ்த்தல்
பளி பணி பற்றல் பன்மஞ்சனம் ஆதி
தளி தொழில் செய்வது தான் தாசமார்கமே.
என்று இலக்கணம்
வகுக்கிறார். ஆக இந்த சர்யை
நெறிப் படி
ஒழுகுபவர், சிவனைப் பரம்பொருளா
கவும், தம்மை சிவனுக்குத் தாஸனாக/அடிமை
யாக/சேவகனாக/வும் இருத்திக்
கொண்டு தாஸமார்
கத்தைப் பின்பற்றுவார்கள். இறுதியில் இதன்
மூலம் சிவனது
ஸாலோக்ய முக்தியை யடையலாம்.
இரண்டாவதுபிரிவு க்ரியா
என்பதாகும்.
பூசித்தல்
வாசித்தல் போற்றல் செபித்திடல்
ஆசற்ற நற்றவம் வாய்மை அழுக்கின்மை
நேசித்து இட்டன்ன மும் நீர் சுத்தி
செய்தல் மற்று
ஆசற்ற சற்புத்திர மார்க மாகுமே.
என்று இதற்குத்
திருமூலர் தந்த இலக்கணப்
படி சிவவழிபாட்டுக்குத் தேவையான மந்த்ரங்கள்
மற்றும்
தந்த்ரங்களை, ஒரு நல்ல குருவை அண்டி,
அவரிடம் கற்றுத் தெளிந்து, ஸமய - விசேஷ –
நிர்வாண தீக்ஷைகளைப் பெற்று ஸ்வாத்மார்த்த
பூஜை மற்றும் பரார்த்தபூஜை
செய்து, அதன்
மூலம் இறுதியில் சிவனது ஸாமீப்யமுக்தியை
யடையலாம்.
மூன்றாவது
பிரிவு யோகம் என்பதாகும். இது
உடலையும் உள்ளத்தையும் நலத்துடன் வைத்துக்கொண்டுப் போற்றிக் காப்பாற்றிக் கொள்ளும்
ஒழுக்கங்களைப் பற்றிக் கூறுகின்ற நெறியாகச் சொல்லப் படுகிறது. இதில் முப்பத்தாறு தத்துவங்கள், தத்துவங்களின்
அதிகாரி, ஜீவாத்மா, பரமசிவன், சக்தி, ஜகத்துக்குக்காரணமான மாயை மற்றும்
மஹாமாயைகளைக்காணும் வல்லமை, யமம், நியமம், ஆஸநம், ப்ராணாயாமம், ப்ரத்யாஹாரம்,
த்யானம், தாபணா, ஸமாதி, மூலாதாரம் முதலிய ஆதாரங்களுடைய முறைமைகள் விளக்கப்பட்டு காணப்படுகின்றன.
நான்காவது பிரிவு ஜ்ஞானம்
என்பதாகும்.
தரிசிக்கப்பூசிக்கச் சிந்தனை செய்ய
பரிசிக்கக் கீர்த்திக்கப் பாதுகம் சூடக்
குரு பக்தி செய்யும் குவலயத்தோருக்குத்
தரு முக்தி சார்பூட்டும் சன்மார்கம்
தானே.
என்று திருமூலர்
தந்த இலக்கணத்தின் படி, ஒரு சிவ
பக்தன்,
தன்னை முழுவதுமாய்ச் சிவனுக்கு ஆத்மார்ப்
பணம் செய்து, சிவனை உருவ, அருவ,
அருவுருவம்
ஆகிய மூன்று திருமேனிகளையும் கடந்து, ஸச்சிதாநந்த
வடிவாய்க் காணுகின்ற
அறிவை எய்த முடியும்.
அந்த அறிவு குருவின்
திருவருளால் எய்தப்படும்.
இந்த நெறிக்கு
சன்மார்கம் என்று பெயர்.
முடிவுரை:-
கர்ம மார்கம், ஜ்ஞானமார்கம், பக்தி மார்கங்
களை போதிக்க வல்லவையான இந்த சைவ ஸித்தாந்த ஆகமங்கள், பரமசிவன் முதலாக குரு சிஷ்ய பரம்பரை வழியாக
இடைவிடாது உபதேசி க்கப்பட்டு வருவதாலும்,
ஸாக்ஷாத் சிவபெருமானே திருவாய் மலர்ந்தருளியதாலும் சைவஸித்தாந்தத் துக்குப் ப்ரமாண
நூல்களாகும். மேலும் இவைகள்
சிவபெருமானிடத்தில் அவபோதரூபமாக இருக்கின்
றபடியால் எப்பொழுதுமழியாத நித்யமானவை என் றும் போற்றப்படுகின்றன. எனவே நாம்
சைவஸித் தாந்த தத்துவங்களைச் சரியான குரு ஒருவரை அணுகி, பூசித்து, வாசித்து, போற்றி செபித்து வாழ் வில்
உய்வோமாக.
“தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவரக்கும் இறைவா போற்றி.”
No comments:
Post a Comment