மாலறியா நான்முகனும் காணா மலையினை
நாம்
போலறிவோம் என்றுள்ளப் பொக்கங்களே
பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ
கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே
அறிவறியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக்
கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனே
யென்று
ஓலமிடினும் உணரா யுணராய்
காண்
ஏலக்குழலி பரிசேலோரெம்பாவாய்.
ஸர்வக்ருத் ஸர்வதாதாரம்
ஸர்வஜ்ஞமபராஜிதம்।
ஸர்வபூதாத்மபூதஸ்த்தம்
ஸம்ஸ்ரயே ச ஸதாஸிவம்॥
வைதிகம் மற்றும் லௌகிகம் என்று கலந்து
காணப்படும் இப்பூவுலகில் பக்திநெறிகள் பல பெருகி வந்தன. அவற்றபள் பரமசிவநைப் பெருந்தெய்வமாகக் கொண்டு
சைவம் என்ற சமயம் ஒன்றும் ஏற்பட்டது.
பரமசிவனார் சிவம்/சிவன், பசுபதி, சங்கரன், தென்னாடுடையான் என்று பலவிதமான பெயர்களால்
போற்றப்படுகிறார். ருக்வேதத்தில் சிவனை
ருத்ரன் என்ற அழைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். பின்னாளில் புராணங்களும் அவ்வாறே
அழைத்த்தையும் தெளியலாம். நமது பாரதநாட்டினை கி.பி.
இரண்டாம் நூற்றாண்டில் ஆண்ட குஷாணவம்சத்து அரசர்கள், சகர்கள், ஹூணர்கள் ஆகிய
அரசர்கள் சைவமதத்தைத் தழுவிவந்தனர். வட
இந்தியாவில் எல்லா இடங்களிலும் சைவமதம் தழைத்து வளர்ந்தது. தென்னிந்தியாவும்
இவ்விஷயத்தில் சளைத்ததல்ல. நாயன்மார்கள்
என்ற சமயக் குரவர்கள் பலர் அவ்வப்பொழுது அவதரித்துப் பல்லவர்கள், சோழர்கள்,
பாணடியர்களது கொடைத்திறனாலும் காக்குந் திறனாலும் சைவசமயம் விசுவரூபமெடுத்துச்
சிறப்புடன் விளங்கக் காரணமாயிருந் தனர். சிவனை லிங்க வடிவில் வழிபட்டனர். கி.பி. ஆறாம் நூற்றாண்டிலிருந்து பன்னிரண் டாம்
நூற்றாண்டு வரைப் பல சிவாலயங்கள் தோன்றின.
கி.பி. எட்டாம் நூற்றாண்டு முதல்
பன்னிரண்டாம் நூற் றாண்டு வரை காச்மீரத்தில் பல இடங் களில்
சிவாலயங்கள் நிர்மாணிக்கப்பட்டன.
அங்கு சைவ சமயம் தரிசனம் அதா வது தத்துவமாகவும் உருவெடுத்தது. அதனுடன் சாக்தம் எனப்படுகிற சக்திநெறியும்
தழைத்து வளர்ந்தது.
சைவசமயம் உலகில் பரவலாகப் பலரால்
பேரனபுடனும் பேராதரவுடனும் வளர்ந்தபொழுது, அது சைவம், பாசுபதம், காலாமுகம், காபாலிகம்
என்ற நான்கு பெயர்களுடன் நான்கு வித பக்திநெறிகளாகப் பிற்காலத்தில்
வகைப்படுத்தப்பட்டது. சைவசித்தாந்தம், வட இந்தியாவில் பொதுவாக “காச்மீரசைவ மதம்” என்றும்; தென்னிந்தியாவில் “வீரசைவமதம்” என்றும் புகழப்பட்ட விளங்குகிறது. இவையனைத்து நெறிமுறைக்கும் சங்கரனாரே
முதற்தெய்வமாவார். அத்தகைய சங்கரனாருக்கு
விளக்கவுரை:-
சைவஸித்தாந்தத்தின் முக்கியக்கருத்து ஆகமம்
என்பதில் தான் பொருட்செறிவுடன் காணப்படுகிறது.ஆ+கமம் என்ற இரு
தமிழ்ச்சொற்களின் புணர்ச்சியால் ஆகமம் என்ற சொல் பெறப்படுகிறது. ஆ என்றால் ஆத்மா; பசு என்ற பொருளும்
தரும். ஆகலின் இவ்வுலக உயிர்கள்/உயிரினங்கள்; கமம் என்றால் பதியைக் குறித்து
நிறைவு தருவதாகும். ஆக, பசு+பதி= பசுபதியான சிவத்தோடு
ஒன்றியிருந்து அதன் மூலம் நிறைவு என்ற முக்தியைப் பெறுதலாகும்.
இந்த ஆகமங்கள் சைவஸித்தாந்த்தின்
முக்கிய இலக்கியநூல்களாகும். பொதுவாக இந்த ஆகமங்கள் ஸம்ஸ்க்ருதம் என்னும் வடமொழியில்
இயற்றப்பட்டன. ஆ+கம் என்ற
வினைவேர்ச்சொல்லிலிருந்து ஸம்ஸ்க்ருதம் என்னும் வடமொழியின் வ்யாகரணம் என்ற இலக்கண
அமைப்புவிதிகளின்படி "வந்தடைதல், போய்ச்சேர்தல், முற்காலந்
தொட்டு வருகின்ற அறிவையுடையது மற்றும் இறைவனை அடைவிக்கும் கருவி அல்லது இறைவனை
அடைவதற்கான வழிமுறைகளைக் கூறும் அல்லது அறிவுறுத்தும் நூல்" என்ற
பொருட்படிம்படி அமைந்தது இந்த ஆகமம் என்ற சொல்.
"வேதமொடு ஆகமம் மெய்யாம் இறைவன் நூல்
ஓதும் பொதுவும் சிறப்பும் என்றுமுள்ளன"
என்கிறார் திருமூலர். "ஆரணநூல்
பொது ஆகமம் அருஞ்சிறப்பு நூலாம்,
நீதியினால் இவை உலகர்க்கும் சத்திநிபாதர்க்கும் நிகழ்த்தியன" என்று
அருள்நிதி சிவாசார்யருடைய கூற்றா கும். "ஆகமமாகி
அன்றண்ணிப்பான் தாள் வாழ்க" என்பார் மாணிக்கப் பெருமான். ஆ என்றால் சிவஜ்ஞானம், க என்றால்
மோக்ஷஸாதனம், ம என்றால் மலநாசனம் என்கிறது காமிகாகமம். அதாவது சிவஜ்ஞானத்தை யறிந்து மலத்தைப் போக்கி
முக்தியடைதல்.இந்த ஆகமநூல்களில் முக்கியமாக சிவனது கோயில்களின் கட்டட
அமைப்புகள், கோயில்களில் சிவனை வழிபடும்
முறைகள், வழிபாட்டுக்குத் தேவையான மந்த்ரங்கள் மற்றும் தந்த்ரங்கள்
தொகுத்துரைக்கப்பட்டுள்ளன. பொதுவாக இந்த
ஆகமங்களெல்லாம் ஸம்ஸ்க்ருதம் என்னும் வடமொழியில்
எழுதப்பட்டிருந்தாலும், தென்னிந்திய மக்களிடையே, அதிலும் குறிப்பாகத் தமிழர்களால்
மட்டுமே இன்றளவும் நடைமுறையில் கடைபிடிக்கப்படுகின்றன. ஆகையால் இந்த ஆகமங்களைக் கற்றுக்கொண்ட பிறகு
தான், சைவசமயத்தின் பல நுணுக்கங்களை அறிந்து கொள்ள முடியும். இவைகளில் முக்கியமாக இருபத்தெட்டு ஆகமங்கள்
மிகவும் புகழ்வாய்ந்கவை. அவை என்னென்ன
என்பதைச் சற்றே பார்ப்போம்.
1. ஸத்யோஜாதம் என்ற
முகத்திலிருந்து காமிகம்,யோக-
ஜம்,சிந்த்யம்,காரணம்,அஜிதம்
என்ற பெயர்களுடன் ஐந்துவகையான ஆகமங்கள் தோன்றின.
2.
வாமதேவம் என்ற முகத்திலிருந்து தீப்தம்,ஸூக்ஷ்மம்,
அம்சுமான், ஸுப்ரபேதம், பெயர்களுடன் ஐந்துவகை
யான ஆகமங்கள் தோன்றின.
3.
அகோரம் என்ற முகத்திலிருந்து விஜயம்,நிச்ச்வாஸம்,
ஸ்வாயம்புவம், அநலம், வீரம் என்ற பெயர்களுடன் ஐந்துவகையான ஆகமங்கள் தோன்றின.
4.
தத்புருஷம் என்ற முகத்திலிருந்து ரௌரவம், முகுடம்,
விமலம், சந்த்ரஜ்ஞாநம், பிம்பம் என்ற பெயர்க ளு டன் ஐந்துவகையான ஆகமங்கள் தோன்றின.
5.
ஈஸாநம் என்ற முகத்திலிருந்து ப்ரோத்கீதம், லலிதம், ஸித்தம், ஸந்தாநம்,
ஸர்வோத்தரம், பரமேச்வரம், கிரணம், வாதுலம் என்ற பெயர்களுடன் ஐந்துவகையான ஆகமங்கள்
தோன்றின.
இந்த
இருபத்தெட்டு ஆகமங்களும் சிவபெருமானின் அங்கங்களாகக் கருதப்படுகின்றன. அவையாவன :-
1. காமிகம்=திருவடிகள் 2.
யோகஜம்= கணுக்கால்கள்
3. சிந்த்யம்=கால்விரல்கள் 4.
காரணம்=கெண்டைக்கால்கள்
5. அஜிதம்=முழங்கால்கள் 6. தீப்தம்=தொடைகள்
7. ஸூக்ஷ்மம்=குஹ்யம் 8. ஸஹஸ்ரம்=இடுப்பு
9 அம்சுமான்=முதுகு 10. ஸுப்ரபேதம்=தொப்புள்
11. விஜயம்=வயிறு 12. நிச்ச்வாஸம்=நாசி
13. ஸ்வாயம்புவம்=முலைமார்பு 14. அநலம்=கண்கள்
15. வீரம்=கழுத்து 16. ரௌரவம்=காதுகள்
17. முகுடம்=திருமுடி 18. விமலம்=கைகள்
19.
சந்த்ரஜ்ஞாநம்=மார்பு 20. பிம்பம்=முகம்
21. ப்ரோத்கீதம்=நாக்கு 22. லலிதம்=கன்னங்கள்
23. ஸித்தம்=நெற்றி 24. ஸந்தாநம்=குண்டலம்
25. ஸர்வோத்தரம்= பூணூல் 26. பரமேச்வரம்=மாலை
27. கிரணம்= ரத்நாபரணம் 28.வாதுலம்=ஆடைகள்
No comments:
Post a Comment