Saturday, 10 March 2018

ஸ்ரீரங்க கத்யம் Part IV





     தனக்கே உரித்தான எப்பொழுதும் நியமிக்கத் தகுந்தவனாயிருக்கை,   எப்பொழுதும் தாஸனா யிருக்கை இவைகளையே ஸாரமாகவுடைய ஜீவாத்மாக்களின் ஸ்வபாவங்களினுடைய அநுஸந் தாநத்தை முன்னிட்டுக் கொண்டு உண்டாகின்ற 
பகவானுடைய எல்லையில்லாத மேன்மையையு
டைய தலைவனாகயிருத்தல் முதலிய எல்லா நற்பண்பு
களின் கூட்டங்களுடைய அநுபவத்தினால் உண்டாக் கப்பட்ட எல்லையில்லாத மேன்மையையுடைய பேரன்பினால்  செய்விக்கப்பட்ட எல்லா நிலைக ளுக்கும் தகுந்த எல்லாவிதமான கைங்கர்யங்கள் ஒன்றிலேயே ஆசையாகிற ஸ்வரூபமாகவுடையதும் எப்பொழுதுமான கைங்கர்யத்தை அடைவதற்கு உபாயமாகின்ற பக்தி, மற்றும் அந்த பக்திக்கு உபாயமான நல்லதான ஜ்ஞாநயோகம் (அறிவதை நன்றாக அறிதல்), அந்த ஜ்ஞானயோகத்துக்கு உபாயமான கர்யோகம் (செய்வனவற்றைத் திருந்தச்செய்தல் மற்றும் செய்யாதன செய்யேல்), அந்த கர்மயோகத்துக்கு ஏற்பதான நல்லவனாயிருக் குந்தன்மை, தெய்வம்-உண்மை-தர்மம் இவைகள் உண்டென்ற ஆஸ்திகனாயிருக்கும் தன்மை முதலிய எல்லாவிதமான, ஜீவாத்மாவுக்கு இருக்கவேண்டிய ஆத்மகுணங்கள் இல்லாதவனாயும், தாண்டமுடி யாத மற்றும் அளவில்லாததுமான அதற்குப் பகை யாகிற ஜ்ஞானம்-கர்மா அதாவது விபரீதமான அறிவு விபரீதமான செயல் இவைகளுக்குத்தகுந்த தான மூலமாக இருக்கின்ற பாபங்களின் வாஸனை அதாவது பசி, தாகம், துன்பம், அறியாமை, மூப்பு மற்றும் மரணம் என்கிற ஆறுவிதமான பாபங்க ளென்னும் அலைகளின் ஆர்ப்பரிப்பையுடைய பெரிய கடலின் நடுவிலே முழுகினவனாயும், எள் ளோடு எண்ணெய் சேர்ந்திருப்பது போலவும், மரத் தோடு நெருப்பு சேர்ந்திருப்பது போலவும் பிரிக் கமுடியாத நிலம், இயற்கை, வடிவம் என்ற மூன்று குணங்களையுடையதும், ஒவ்வொரு நொடியும் மாறுதலை இயல்பாகக்கொண்ட அசேதநம் என்று சொல்லும்படியான ப்ரக்ருதி அதாவது இயல்பாக நுழைந்து எங்கும் பரவியிருக்கின்ற நிலையை யுடை யதும், தாண்டமுடியாததுமான பகவாநுடைய மாயையினால் மறைக்கப்பட்ட  தன்னுடைய வெளிப்பாட்டையுடையவனாகவும், முழுமுதற் கொண்டிருக்கின்ற "உடலே உயிரென்று நினைக்கும் அறியாமை" யினாலே, சேர்த்துக் குவித்த அளவில்லாத அவிழ்க்கமுடியாத செயல் அல்லது வினைகளென்கிற கயிறுகளினால் சுற்றப் பட்டவனாயும், இனி வரவிருக்கிற அளவில்லாத காலங்களில் எதிர்ப்பார்த்திருந்த போதிலும், பார்க் கப்படாத அல்லது பார்க்கமுடியாததான இவ்வுலக வாழ்க்கையென்னும் பிறவிப்பெருங்கடலைத்  தாண் டுவதற்கு உபாயத்தையுடையவனாயுமிருக்கிற அடியேனான நான், எல்லா ஜீவராசிகளுடைய கூட்டத்திற்கும் அடைக்கலம் என்று அடையவேண் டியவனாகிய ஸ்ரீமஹாலக்ஷ்மீயுடன் சேர்ந்திருப் பவனான ஸ்ரீமந் நாராயணனே! தாமரைப்பூக் களைப்போன்றதான உம்முடைய  திருவடிகளான இரண்டையும் அடைக்கலமாக அடைகின்றேன்.

Friday, 2 March 2018

ஸ்ரீரங்ககத்யம் Part III








ஸ்வாத்ம நித்ய நியாம்ய நித்யதாஸ்யைக ரஸாத்ம ஸ்வபாவாநுபாவாநுஸந்தாந பூர்வக பகவத் அநவதிகாதிய ஸ்வாம்யாதி அகிலகுணகணாநுபவ ஜனித அநவதிக அதிய ப்ரீதிகாரித அേശஷ அவஸ்த்தோசித அേശേശஷதைகரதிரூப நித்யகைங்கர்ய ப்ராப்த்யுபாயபூத பக்தி ததுபாய ஸம்யக்ஜ்ஞாந ததுபாய ஸமீசீன க்ரியா ததநுகுண ஸாத்விகதாஸ்திக்யாதி ஸமஸ்த ஆத்மகுணவிஹீந துருத்தராநந்த தத்விபர்யய ஜ்ஞாந க்ரியாநுகுண அநாதி பாபவாஸனா மஹார்ணவ அந்தர்நிமக்ந:; திலதைலவத் தாருவஹ்நிவத் துர்விவே த்ரிகுண க்ஷண க்ஷரண ஸ்வபாவ அசேதந ப்ரக்ருதி வ்யாப்திரூப துரத்யய பகவந்மாயா திரோஹித ஸ்வப்ரகா:; அநாத்யவித்யா ஸஞ்சித அநந்த அக்ய விശ്ரம்ஸந கர்ம பா ப்ரக்ரதித:; அநாகத அநந்தகால ஸமீக்ஷயாபி அத்ருஷ்ட ஸந்தாரோபாய:; நிகில ஜந்துஜாதரண்ய ஸ்ரீமந் நாராயண தவ சரணாரவிந்தயுகளம் ரணமஹம் ப்ரபத்யே 2

ZATAYUPA (SATAYUPA) THE ANCIENT SAGE

  Zatayupa was an ancient sage and a king of the Kekaya kingdom. He gave up his throne to his son and went to the Kurukshetra forest to me...