Saturday 10 March 2018

ஸ்ரீரங்க கத்யம் Part IV





     தனக்கே உரித்தான எப்பொழுதும் நியமிக்கத் தகுந்தவனாயிருக்கை,   எப்பொழுதும் தாஸனா யிருக்கை இவைகளையே ஸாரமாகவுடைய ஜீவாத்மாக்களின் ஸ்வபாவங்களினுடைய அநுஸந் தாநத்தை முன்னிட்டுக் கொண்டு உண்டாகின்ற 
பகவானுடைய எல்லையில்லாத மேன்மையையு
டைய தலைவனாகயிருத்தல் முதலிய எல்லா நற்பண்பு
களின் கூட்டங்களுடைய அநுபவத்தினால் உண்டாக் கப்பட்ட எல்லையில்லாத மேன்மையையுடைய பேரன்பினால்  செய்விக்கப்பட்ட எல்லா நிலைக ளுக்கும் தகுந்த எல்லாவிதமான கைங்கர்யங்கள் ஒன்றிலேயே ஆசையாகிற ஸ்வரூபமாகவுடையதும் எப்பொழுதுமான கைங்கர்யத்தை அடைவதற்கு உபாயமாகின்ற பக்தி, மற்றும் அந்த பக்திக்கு உபாயமான நல்லதான ஜ்ஞாநயோகம் (அறிவதை நன்றாக அறிதல்), அந்த ஜ்ஞானயோகத்துக்கு உபாயமான கர்யோகம் (செய்வனவற்றைத் திருந்தச்செய்தல் மற்றும் செய்யாதன செய்யேல்), அந்த கர்மயோகத்துக்கு ஏற்பதான நல்லவனாயிருக் குந்தன்மை, தெய்வம்-உண்மை-தர்மம் இவைகள் உண்டென்ற ஆஸ்திகனாயிருக்கும் தன்மை முதலிய எல்லாவிதமான, ஜீவாத்மாவுக்கு இருக்கவேண்டிய ஆத்மகுணங்கள் இல்லாதவனாயும், தாண்டமுடி யாத மற்றும் அளவில்லாததுமான அதற்குப் பகை யாகிற ஜ்ஞானம்-கர்மா அதாவது விபரீதமான அறிவு விபரீதமான செயல் இவைகளுக்குத்தகுந்த தான மூலமாக இருக்கின்ற பாபங்களின் வாஸனை அதாவது பசி, தாகம், துன்பம், அறியாமை, மூப்பு மற்றும் மரணம் என்கிற ஆறுவிதமான பாபங்க ளென்னும் அலைகளின் ஆர்ப்பரிப்பையுடைய பெரிய கடலின் நடுவிலே முழுகினவனாயும், எள் ளோடு எண்ணெய் சேர்ந்திருப்பது போலவும், மரத் தோடு நெருப்பு சேர்ந்திருப்பது போலவும் பிரிக் கமுடியாத நிலம், இயற்கை, வடிவம் என்ற மூன்று குணங்களையுடையதும், ஒவ்வொரு நொடியும் மாறுதலை இயல்பாகக்கொண்ட அசேதநம் என்று சொல்லும்படியான ப்ரக்ருதி அதாவது இயல்பாக நுழைந்து எங்கும் பரவியிருக்கின்ற நிலையை யுடை யதும், தாண்டமுடியாததுமான பகவாநுடைய மாயையினால் மறைக்கப்பட்ட  தன்னுடைய வெளிப்பாட்டையுடையவனாகவும், முழுமுதற் கொண்டிருக்கின்ற "உடலே உயிரென்று நினைக்கும் அறியாமை" யினாலே, சேர்த்துக் குவித்த அளவில்லாத அவிழ்க்கமுடியாத செயல் அல்லது வினைகளென்கிற கயிறுகளினால் சுற்றப் பட்டவனாயும், இனி வரவிருக்கிற அளவில்லாத காலங்களில் எதிர்ப்பார்த்திருந்த போதிலும், பார்க் கப்படாத அல்லது பார்க்கமுடியாததான இவ்வுலக வாழ்க்கையென்னும் பிறவிப்பெருங்கடலைத்  தாண் டுவதற்கு உபாயத்தையுடையவனாயுமிருக்கிற அடியேனான நான், எல்லா ஜீவராசிகளுடைய கூட்டத்திற்கும் அடைக்கலம் என்று அடையவேண் டியவனாகிய ஸ்ரீமஹாலக்ஷ்மீயுடன் சேர்ந்திருப் பவனான ஸ்ரீமந் நாராயணனே! தாமரைப்பூக் களைப்போன்றதான உம்முடைய  திருவடிகளான இரண்டையும் அடைக்கலமாக அடைகின்றேன்.

No comments:

Post a Comment

XSABARI (SABARl)

  XSABARI (SABARl)   XSABARI (SABARl) was an aged woman of the tribe of forest-dwellers. Sri Rama, during his life in the forest, gave h...