Saturday, 24 February 2018

ஸ்ரீ ரங்ககத்யம் Part - II



 


தனக்கு வசப்பட்ட பத்தர், முக்தர், நித்யர் மூன்று வகையான ஜீவாத்மாக்கள், இயற்கை, நேரம், தூய்மையான நன்மை என்கிற அறியுந்தன்மை யில்லாதவைகள், இவைகளின் பல பிரிவுகளையுடையவனாயும்; அறியாமை, தானே எல்லாம் என்கிற எண்ணம், விருப்பு, வெறுப்பு, பீடித்தல் என்கிற ஐந்துவிதமான இன்னல்கள், புண்யம்-பாபம் என்பவற்றைக்கொடுக்கக் கூடிய கர்மவினைகள் முதலான குற்றங்களினாலும் தொடப்படாதவனும்; தனது எண்ணத்தின்மையாலே ஏற்பட்ட எல்லையில்லாத மேன்மை, அறிவு, வலிமை, நியமிக்குந் தன்மை, மாற்றமில்லாமை, ஆற்றல், தேஜஸ் என்னும் உள்ளொளி, நல்லொழுக்கம்,பரிவு, மெனமை, நேர்மை, நட்பு, ஸரி நிகர் ஸமானமா யிருத்தல், கருணை, இனிமை, கம்பீரம், வள்ளல்தன்மை, திறமை, நிலைத்திருத்தல், துணிவு, பயமின்மையால் வீரத்துடனும் வலிமையுடனும் எதிரிகளைப் புறமுதுகிட்டோடவைக்கும் தன்மை, ஸத்யம் என்பதான உண்மையை விரும்பியேறகுந் தன்மை, உண்மையைக் குறித்தே நோக்கமாயிருக்குந் தன்மை, மற்றவர்க்கு உதவும் தன்மை, தன்னையண்டி வணங்கினவனுக்கு உண்மையாக இருத்தல் போன்ற முதலான கணக்கில்லாத நற்பண்புகளின் கூட்டங்களாகிற பெருக்குகளுக்கு பெரிய கடல் போன்றவனும்; பரம்பொருள் எனப்படுகிற பரமாத்மாவானவனும்; தனக்குவமையில்லாதவனும், நம் தலைவனுமான ஸ்ரீரங்கநாதனை; நன்கு அறியப்பட்டு எப்பொழுதும் நியமிக்கத்தகுந்தவனாயிருக்கையும், எப்பொழுதும் தாஸனாக அதாவது ஸேவகனாக இருக்கையையும், மேற்சொன்ன இந்த இரண்டு விதமான கூறுகளை ஸாராம்சமாகவுடைய, ஜீவாத்மாவின் ஸ்வபாவத்தை யுடையவனுமாகிய அடியேனான நான்,மேற்சொன்ன அந்த பகவானை ஒருவனைப்பற்றிய அனுபவத்தை யுடையவனாயும்,அந்த ஒரு பகவானையே ப்ரியனா கவுடையவனாகவும், எல்லாவித குணக்கூட்டங்களா லும் நிறைந்த அந்த பகவானை ஒருவனையே, மிகவும் ஆழங்கால் பட்ட அநுபவத்தினால், இடைவிடாமல் அநுபவித்து, அந்த அநுபவத்தினால் உண்டாக்கப் பட்டதும் எல்லையில்லாத மேன்மையையுடையதும், பேரன்பினால் செய்விக்கப்பட்ட, எல்லாவிதமான நிலைகளுக்கும் தகுந்ததாயிருக்கின்ற எல்லாவிதமான கைங்கர்யங்களில் ஒன்றிலேயே ஆசைக்கொண்டிருத் தல் என்னும் ஸ்வரூபமாகவுடைய எப்பொழுதும் ஸேவகனாகக் கடவேன். 1 

No comments:

Post a Comment

LAXMI PANDA BY SAVIE KARNEL

    Laxmi Panda: Netaji’s Youngest Spy Finally Gets Her Due Savie Karnel’s new book revives the forgotten heroine of the INA for today’s r...