Saturday, 2 June 2018

ஸ்ரீரங்க கத்யம் Part V



Image result for Image of Srirangagadyam

"ஏவமவஸ்த்திதஸ்யாபி அர்த்தித்வ மாத்ரேண பரமகாருணிகோ பகவான் ஸ்வாநுபவ ப்ரீத்யா உபநீத ஐகாந்தி காத்யந்திக நித்யகைங்கர்யைக ரதிரூப நித்யதாஸ்யம் தாஸ்யதீதி விச்வாஸ பூர்வகம் பகவந்தம் நித்யகிங்கரதாம் ப்ரார்த்தயே"3

இப்படி இருந்த போதிலும், எனக்கு வணங்கி வேண்டுவது மாத்திரத்தி னா லேயே மிகுந்த கருணையையுடைய பகவான், தன்னை அநுபவிப்பதினால் ஏற்பட்ட பேரன்பினால் உண்டாக்கப் பட்டதும், ஒரே நிச்சயத்தோடு கூடிய தும், ஒழிவு இல்லாமலிருப்பதுமான எப்பொழு துமான கைங்கர்யம் என்ற ஸேவகத்தில் ஒன்றிலேயே ஆசையை ஸ்வரூபமாக வுடைய நித்யகைங்கர்யத்தைக் கொடுக்கப் போகின்றான் என்கிற பெருத்த நம்பிக்கை யை முன்னிட்டு, பகவானை, அடியேனா கிய நான், அவரிடத்தில் நித்யகைங்கர் யத்தை மாத்திரமே வேண்டிக் கொள்கி றேன். 3.

                     Image result for Image of Srirangagadyam  
தவாநுபூதி ஸம்பூத-ப்ரீதி காரித தாஸ்யதாம்
தேஹி மே க்ருபயா நாத ந ஜாநே கதிரந்யதா4

ஹே பகவானே உம்முடைய அநுபவத் தினால் உண்டான பேரன்பினால் செய்விக் கப்பட்ட கைங்கர்யத்தைக் கருணை கொண்டு எனக்குக் கொடுங்கள்.   உம்மைத் தவிர அடியேனுக்கு வேறு கதி எதுவும் தெரியாது. 4.

ஸர்வாவஸ்தோசிதாசிதாசேஷ சேஷதைகரதிஸ்தவ  பவேயம் புண்டரீகாக்ஷ த்வமேவைவம் குருஷ்வ மாம்5


அன்றலர்ந்த தாமரை மலரொத்த திருக் கண்களையுடைய பகவானே! உமக்கு  எல்லா நிலைகளுக்குத் தகுந்ததாகிய எல்லா கைங்கர்யங்களிலேயும் ஒன்றி லேயே ஆசையுடையவனாக அடியேன் ஆகக் கடவேன்.  ஆகையால் அடியே னான என்னை இப்படிப் பட்டவனாக நீரே செய்துவிடும்.5.


ஏவம் பூத தத்த்வ யாதாத்ம்ய அவபோத ததிச்சா ரஹிதஸ்யாபி ஏததுச்சாரண மாத்ராவலம்பநேன உச்யமானார்த்த பரமார்த்த நிஷ்ட்டம் மே மந த்வமேவ அத்யைவ காரய6

இப்படிப்பட்ட தத்த்வங்களின் உண்மை யைப் பற்றித் தெரிந்துகொள்வது, அவற் றில் ஆசையில்லாமலிருந்த போதும், இதைச் சொல்வதை மட்டும் ஒன்றையே ஆதாரமாக வைத்துக்கொள்வதினால், இதில் சொல்லப்படுகின்ற அர்த்தத்தில், உண்மையான நிலையையுடையதாக அடியேனது மனதை இப்பொழுதே நீரே செய்விக்கவும்.6.

அபார கருணாம்புதே அநாலோசித விசேஷாசேஷலோக சரண்ய, ப்ரண தார்த்திஹர, ஆச்ரிதவாத்ஸல்யைக மஹோததே, அநவரத விதித நிகில பூத ஜாதயாதாத்ம்ய, ஸத்யகாம, ஸத்யஸங்கல்ப, ஆபத்ஸக, காகுத்ஸ்த்த, ஸ்ரீமந், நாராயண, புருஷோத்தம, ஸ்ரீரங்கநாத, மம நாத, நமோ(அ)ஸ்து தே7


கரையில்லாத கருணைக்கடலே, எண்ணத் திற்கும் அப்பாற்பட்டுப் பல வேற்றுமை களையும், சிறப்புகளையும், மேன்மைக ளையும் கொண்டிருத்தலால் அனைத்து யிர்களாலும் உலகங்களாலும் அடைக் கலமாக அணுகப்பெற்றவனே! அண்டி வணங்கியவர்களின் இன்னலைப் போக்கடிப்பவனே! தாய்ப்பசுவானது தனது கன்றின் மீது எவ்வளவு பரிவு காட்டுமோ அவ்வளவு அதைப்போலத் தன்னை அடைக்கலம் அடைந்தவர்களுக்குப் பரிவு என்ற ஒன்றை மட்டும் கொண்டே கடலாக இருப்பவனே! இடைவிடாத அறியப் பட்ட எல்லா ப்ராணிகளின் கூட்டங் களுடைய உண்மையான நிலையைக் கொண்டவனே! உண்மையை விரும்பு பவனே! வீணாகாத உண்மையின் உறு தியிலிருப்பவனே! இடுக்கண் களை கின்ற நண்பனைப் போன்றவனே! கொல்லப்படக்கூடிய வனைக் கூட கருணையால் மன்னித் தருளும் ககுத்ஸ்த்தனது வம்சத்தில் தோன்றி ஸ்ரீராமனாக அவதரித்தவனே! பெரிய பிராட்டியான ஸ்ரீலக்ஷ்மீதேவி யோடு கூடியவனே! எங்கும் வ்யாபித் திருக்கும் தன்மை கொணட நாராயணனே! கரந்தெங்கும் பரந்துள்ளவனே! தன்னை அண்டியவர்களுக்கு அவர்களது விருப் பங்களையும் கொடுத்து, அதனால் த்ருப்தி யுறாது தன்னையும் கொடுத்தும் காத்தும் தன்னுடைய எளிமையை வெளியிடும் புருஷோத்தமனே!  கெட்ட இந்த்ரியங்க ளுக்கு வசப்பட்டு, பாபத்தினால் மறைக் கப்பட்ட மனிதர்களின் மனங்களைத் தூய்மையாக்கும் புண்ய பூமியான பகவான் வஸிக்கும் இடமான ஸ்ரீரங்கம் என்னும் திவ்யதேசத்தில் உறையும் ஸ்ரீரங்கநாதனே! என்னு டைய தலைவனே! உன்னை நான் அடிபணிந்து வணங்குகின்றேன்.7.


முடிவுரை-
கற்றதனா லாயபய னென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழா அர் எனின்.

என்னும் வள்ளுவனது வாக்கினை மனத்திலிருத்த வேண்டும்.  இவ்வுலகில் எந்த உயிராயிருந்தாலும் கடவுளை வணங்கவேண்டும்.  அதிலும் கற்றவர்கள் மற்றையேதும் நினைக்காமல் உற்றவ னாம் உயர்ப்பரம்பொருளாம் இறைவனை எப்பொழுதும் இடைவிடாது வணங்க வேண்டும்.  இந்த ஸ்ரீரங்க கத்யம் என்ற நூலில் ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தத்தின் தத்த்வத்ரயம் என்னும் மூலமந்த்ரம், த்வயம், சரமச்லோகம் என்றவைகளின் இரண் டாவதான த்வயம் என்கிற "ஸ்ரீமந் நாராயண சரணௌ ரணம் ப்ரபத்யே, ஸ்ரீமதே நாராயணாய நம " என்பதின் உட்பொருளை விளக்குகிறது.   இங்கு ஸ்ரீரங்ககத்யத்தில் ஸ்ரீமந் மற்றும் நாராயண என்கிற இரண்டு சொற்களும் மூலமாகிய த்வயமந்த்ரத்திலிருக்கிற ஒன்றோடொன்று சேர்ந்த ஸித்தோபாயத் தையும் ஸித்தமான ப்ரயோஜநத்தையும் தெரிவிக்கின்றன.  மேலும், இந்த ஸ்ரீரங்க கத்யத்தில், ஸ்ரீரங்கநாத! என்று விளிவேற் றுமையில் உள்ள சொல்லானது, "அர்ச்சாவதாரத்தில் உள்ள தெய்வத்தை ஒருவன் பூஜிக்க வேண்டும், அதை ஸேவித் து வணங்க வேண்டும், அதைக் குறித்து யாகம் செய்யவேண் டும், அதையே எப் பொழு தும் த்யாநம் செய்து கொண்டிருக் கவேண்டும், அதனால் பாபங்களை ஒழித் தவனாக பரப்ரஹ்மவடிவமான அந்த விக்ரஹத்தை முன்னிட்டே இறுதியில் அவனிடம் (பகவானான பரமாத்மாவிடம்) நித்ய ஸூரியாய் சென்றடைகிறான்" என்ற சௌநக மஹரிஷியின் கூற்றைத் தெரியப் படுத்துகிறது. ஆதலின், இதைப் படித்துப் பாராயணம் செய்து பகவானை மகிழ் வித்தால்  நம் பாவங்களெல்லாம் தீயினில் தூசாகும் மற்றும் எங்கும் திருவருள் பெற் றும் இன்புறுவோம் என்பது திண்ணம். 

Image result for Image of Srirangagadyam

A SHORT TREATISE ON SANSKRIT PROSODY- PART-III

             In metres regulated by the number of syllabic instants one instant or Matra is allotted to a short vowel, and two to a long one...