துன்பத்தைப் போக்கி இன்பத்தைத் தரவல்லது இலக்கியமாகும். கவிஞர்கள் தாங்கள் கண்ட கேட்ட அனுபவித்த பல வாழ்வியல் கூறுகளை கருத்துடன் கவிதையாகப் புணைந்து பல சமயம் நமது அகத்தினையும் சில சமயம் புறத்தினையும் மகிழ்வித்தனர், மகிழ்விக்கின்றனர், மகிழ்விப்பார்கள். வாடாமொழியாம் வடமொழியான ஸம்ஸ்க்ருதமும் தேன்மொழியாம் தென்மொழியான தீந்தமிழும் தமிழர்களுக்கு இரு கண்கள் போன்றவை.
அவற்றிலிருந்து சில சுவையான செய்திகளைப் பார்ப்போம். காளிதாஸன் சொல்கிறான் ;
பாலே தவ முகம்போஜே கதம் இந்தீவர த்வயம்
அதாவது ஏ பெண்ணே உனது முகமென்னும் தாமரை மலர் மீது இரு கண்கள் என்கிற குவலயங்கள் எப்படி உண்டாயிற்று?
இக்கருத்தைத் தீந்தமிழில் யாரோ ஒரு கவிஞன்,
"- - - - -- -- -- - - - - - - - - - - - - - - - - - - - - - -மானே கேள்!
முண்டகத்தின் மீது முழுநீலம் பூத்ததுண்டு
கண்டதுண்டு கேட்டதில்லை காண் .
இது போன்று நிறைய உள்ளன. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்கிற நோக்கில் நாம் இன்று தெரிந்துகொண்டோம்.
- - - - --- இன்பங்கள் நிறைய துன்பங்கள் குறைய வளர்ந்து வலம் வரும்,
No comments:
Post a Comment